அசத்தல் திட்டம்.. பழங்குடியினரின் வருமானத்தை அதிகரித்து, தொழில்முனைவோராக உயர்த்த முயற்சி.!
அசத்தல் திட்டம்.. பழங்குடியினரின் வருமானத்தை அதிகரித்து, தொழில்முனைவோராக உயர்த்த முயற்சி.!

பழங்குடி விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் மேம்பாட்டு கூட்டமைப்பான ட்ரைஃபெட், புதிய முயற்சியாக வன் தன் திட்டத்தை பழங்குடியினர் தொழில்முனைவோர் திட்டமாக மாற்ற திட்டமிட்டுள்ளது.
இதன்படி வன் தன் யோஜனா திட்டத்தை சிறு வன உற்பத்திப் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக 2020 நவம்பர் 25 ஆம் தேதி ட்ரைஃபெட் அமைப்பு ஓர் இணைய கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது. மாநிலங்களின் முதன்மை துறைகள், மாநில செய்முறை முகமைகள் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.
இந்தக் கருத்தரங்கில் பேசிய ட்ரைஃபெட் அமைப்பின் மேலாண் இயக்குநர் திரு பிரவீர் கிருஷ்ணா, பல்வேறு ஆலோசனைகளுக்கு பிறகு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் முறைகளில் மாற்றத்தை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதன் மூலம் வாழ்க்கைத் தரம் மற்றும் சிறு தொழில்களின் வாயிலாக வருமானம் உயர்த்தப்படும் என்று அவர் கூறினார். வன் தன் திட்டத்தின் இரண்டாவது கட்டம் தொழில்முனைவோர் சார்ந்ததாக இருக்கும் என்றார் அவர்.