Kathir News
Begin typing your search above and press return to search.

நாட்டை பிளவுபடுத்தும் குழுக்கள் மீது கடும் நடவடிக்கை.. மத்திய அமைச்சர் எச்சரிக்கை.!

நாட்டை பிளவுபடுத்தும் குழுக்கள் மீது கடும் நடவடிக்கை.. மத்திய அமைச்சர் எச்சரிக்கை.!

நாட்டை பிளவுபடுத்தும் குழுக்கள் மீது கடும் நடவடிக்கை.. மத்திய அமைச்சர் எச்சரிக்கை.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  14 Dec 2020 8:24 AM GMT

டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தை சாதகமாக பயன்படுத்தி, நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கும் குழுக்கள் மீது பிரதமர் மோடி அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாரத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுருவி இருப்பதாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் ஏற்கனவே கூறியிருந்தார்.

இந்நிலையில், வேளாண் சட்டங்களின் நன்மைகளை விளக்க நேற்று பீகார் மாநில பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. விவசாய கூட்டத்தை மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தொடங்கி வைத்தார். அதில் அவர் பேசியதாவது:

வேளாண் சட்டங்களை வாபஸ் பெறும்வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று போராட்டக்காரர்கள் பேசிவருகின்றனர். மோடி அரசு, விவசாயிகளை மதிக்கிறது. அதே சமயத்தில், விவசாயிகள் போராட்டத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த துடிக்கின்ற குழுக்கள் மீது மோடி அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். அவர்களின் முயற்சியை வெற்றிபெற விட மாட்டோம்

நாட்டை பிளவுபடுத்த வேண்டும் என்று பேசும் இவர்கள் யார் என்று கேட்க விரும்புகிறேன். டெல்லியிலும், மகாராஷ்டிராவிலும் கலவரத்தில் ஈடுபட்டதற்காக, சிறையில் இருக்கும் அறிவுஜீவிகளை விடுதலை செய்யுமாறு இவர்கள் ஏன் கேட்க வேண்டும்.

அவர்களால் நீதிமன்றம் மூலமாக ஜாமீன் பெற முடியவில்லை. ஆகவே, விவசாயிகள் போராட்டத்தில் புகுந்துகொண்டு தங்கள் நலன்களை நிறைவேற்றிக்கொள்வதற்கு பார்க்கின்றனர். அவர்களின் இலக்கு வெற்றி பெறுவதற்கு விட மாட்டோம். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News