Kathir News
Begin typing your search above and press return to search.

சூடான் போரால் பாதிக்கப்பட்ட இந்திய மக்கள்.. 24 மணிநேரம் தொடர்ந்து பயணித்து மீட்ட விமானப்படை..

சூடானில் இருந்து ஏறத்தாழ 24 மணிநேரத்தில் செயல்படுத்தப்பட்ட மீட்பு நடவடிக்கை.

சூடான் போரால் பாதிக்கப்பட்ட இந்திய மக்கள்.. 24 மணிநேரம் தொடர்ந்து பயணித்து மீட்ட விமானப்படை..

Bharathi LathaBy : Bharathi Latha

  |  7 May 2023 3:34 AM GMT

மே 4 ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில், இந்திய விமானப்படையின் C-17 குளோப்மாஸ்டர் விமானம் ஹிண்டனில் இருந்து வான்வழியாக இரவு முழுவதும் பறந்து சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் அதிகாலையில் தரையிறங்கியது. ஜெட்டாவிலிருந்து இடைநில்லா பயணத்தை மேற்கொள்வதற்காக விமானம் அங்கே எரிபொருள் நிரப்பிக் கொண்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள சூடான் வழியாக இந்தியா திரும்பியது. சூடானில் எரிபொருள் கிடைக்காத நிலை மற்றும் எரிபொருள் நிரப்புவதில் தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்க ஜெட்டாவிலிருந்து விமானம் அதிகப்படியான எரிபொருளை நிரப்பிக் கொண்டு சென்றது. இந்த பணியானது 192 பயணிகளை மீட்பதற்காக மேற்கொள்ளப்பட்டது. மீட்கப்பட்டவர்களில் பெரும்பாலும் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் ஆவர்.


இவர்களை ஜெட்டாவிற்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. எனவே கனரக ஜெட் விமானம் மூலம் இடைநில்லா விமானத்தில் நேரடியாக இந்தியாவுக்கு பறக்க வேண்டியிருந்தது. சூடானில், மீட்புக் குழு கனரக ஜெட் விமானத்தை தரையிறக்க ஒரு தாக்குதல் அணுகுமுறையை மேற்கொண்டது. ஏதேனும் அவசரநிலை ஏற்படுமேயானால் விமானத் தளத்திலிருந்து விரைவாக வெளியேறுவதற்கு வாய்ப்பாக இருக்கும் என்பதால் தரையிறங்கிய பிறகும் விமானத்தின் என்ஜின்கள் இயங்கி கொண்டே இருக்கும் படி செய்யப்பட்டது.


பயணிகளில் ஒருவர் சுயநினைவை இழந்தபோது ​​பணியாளர்கள் மற்றொரு திட்டமிடப்படாத அவசரநிலையை எதிர்கொண்டனர். இந்த சூழ்நிலையை உடனடியாகவும் திறமையாகவும் கையாண்ட குழுவினர், அவருக்கு 100% ஆக்சிஜனை கொடுத்து அவரது ஆரோக்கியத்தை உறுதி செய்தனர். மே 5 இரவில் அகமதாபாத்தில் விமானம் தரையிறங்கியது. இதற்காக மீட்புக் குழுவினர் ஏறத்தாழ 24 மணிநேரம் தொடர்ந்து பயணித்துப் பணியாற்றினர்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News