இருப்பு சர்க்கரையை ஏற்றுமதிசெய்து கரும்பு விவசாயிகள், ஆலைகள் பிரச்சினைக்கு தீர்வு: மோடி அரசுக்கு பாராட்டு.!
இருப்பு சர்க்கரையை ஏற்றுமதிசெய்து கரும்பு விவசாயிகள், ஆலைகள் பிரச்சினைக்கு தீர்வு: மோடி அரசுக்கு பாராட்டு.!

கரும்புகளை சர்க்கரை ஆலைகளில் விவசாயிகள் விற்கின்றனர். ஆனால், சர்க்கரை ஆலைகளில் கூடுதல் இருப்பாக விற்பனை செய்யப்படாத சர்க்கரை உள்ளதால், விவசாயிகளுக்கு செலுத்த வேண்டிய பணம் ஒரு பகுதி நிலுவையில் வைக்கப்படுகிறது. சில சமயங்களில் மொத்த பணமும் கூட நீண்ட நாள் நிலுவையாக வைக்கபப்டுகிறது.
பல ஆண்டுகளாக இருந்த இப்பிரச்சினையால் விவசாயிகளும், கரும்பு ஆலைகளும் மிகவும் பாதிக்கப்பட்டு வந்தனர். மேலும் கரும்பு ஆலை தொழிலாளிகளும், கரும்பு வெட்டும் கூலி தொழிலாளர்களும் கூட பாதிக்கப்பட்டு வந்தனர். இந்த நீண்ட காலப் பிரச்சினைக்கு தீர்வு காண இப்போது நரேந்திர மோடி அரசு புதிய முடிவெடுத்துள்ளது.
அதன்படி கூடுதல் சர்க்கரை இருப்பை உடனடியாக அகற்றவும், அவற்றை மத்திய அரசே உடனடி ஏற்றுமதி செய்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தை விவசாயிகளுக்கும், அதே சமயம் ஆலைகளுக்கும் பொறுப்பேற்று கொடுத்து பிரச்சினையை தீர்ப்பது என ஒரு சிறந்த வரலாறு போற்றும் முடிவை எடுத்துள்ளது.
இதன் மூலம், கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை செலுத்த வழி ஏற்படும். அதே சமயம் ஆலைகளின் இருப்பு பிரச்சினையும், ஆளை தொழிலாளர்களின் பிரச்சினைகளையும் தீர்க்க வழி ஏற்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய அமைச்சர் திரு.பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில் " 60 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதிக்கு ஒரு டன்னுக்கு 6,000 ரூபாய் மானியம் வழங்கப்படும் எனவும், இதன் மூலம் 5 கோடி விவசாயிகளும், சர்க்கரை ஆலைகளில் பணியாற்றும் 5 லட்சம் தொழிலாளர்களும் பயன்பெறுவார்கள் என்றார். அதுமட்டுமல்லாமல் மானியங்கள் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
அதன்படி இந்த ஆண்டு இதற்காக மத்திய அரசு ரூ.3,500 கோடி செலவை ஏற்கவுள்ளது. இந்த நிதியுதவி, சர்க்கரை ஆலைகள் சார்பில், கரும்பு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் உடனடியாக நேரடியாக செலுத்தப்படும். அதன்பின், ஏதாவது நிலுவைத் தொகை இருந்தால், அது சர்க்கரை ஆலைகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
மத்திய அரசின் இந்த முடிவு, ஐந்து கோடி கரும்பு விவசாயிகளுக்கு மட்டுமல்ல, அவர்களை சார்ந்து உள்ள இலட்சக்கணக்கான கரும்பு வெட்டும் கூலி தொழிலலர்களுக்கும், இதர தொழிலாளர்களுக்கும், சர்க்கரை ஆலைகளில் பணியாற்றும் ஐந்து லட்சம் பணியாளர்களுக்கும் பயனளிக்கும் மிகுந்த பயனளிக்கும் என்றும் அமைச்சர் கூறினார். நரேந்திர மோடி அரசின் இந்த புதிய வழிமுறைக்கு விவசாயிகள் மற்றும் பலதரப்பட்ட இடங்களில் இருந்து பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.