Kathir News
Begin typing your search above and press return to search.

மனைவியை விவாகரத்து செய்தாலும் குழந்தைகளை பராமரிப்பது தந்தையின் கடமை !

மனைவியை கணவன் விவாகரத்து செய்தாலும், குழந்தைகளை பராமரிக்கும் கடமை தந்தைக்கு உள்ளது என உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

மனைவியை விவாகரத்து செய்தாலும் குழந்தைகளை பராமரிப்பது தந்தையின் கடமை !
X

ThangaveluBy : Thangavelu

  |  18 Aug 2021 6:14 AM GMT

மனைவியை கணவன் விவாகரத்து செய்தாலும், குழந்தைகளை பராமரிக்கும் கடமை தந்தைக்கு உள்ளது என உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

மனைவியை விவாகரத்து செய்த கணவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளின் பராமரிப்பு செலவிற்கு ரூ.4 கோடி ரூபாய் வழங்க குடும்பநல நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் கணவர் பணத்தை தரவில்லை, இதனால் மனைவி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அப்போது இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் சந்திரசூட் எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நடந்தது.

மேலும், கணவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பேசுகையில், விவாகரத்து செய்யும் போது குடும்பநல நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் அனைத்தையும் என் கட்சிக்காரர் நிறைவேற்றியுள்ளார். கொரோனா தொற்று காரணமாக அவரது வியாபாரம் டவுனாகிவிட்டது. இதன் காரணமாக 4 கோடி ரூபாயை அளிக்க முடியவில்லை எனக் கூறினார்.

இதனை தொடர்ந்து நீதிபதிகள் உத்தரவில் கூறியதாவது: மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம். ஆனால் குழந்தைகளை விவாகரத்து செய்ய முடியாது. குழந்தைகளை பெற்றவர் என்ற முறையில் அவர்களை பராமரிக்கும் கடமை கணவருக்கு உள்ளது. அதில் எந்த ஒரு மாற்று கருத்துக்கும் இடமில்லை. எனவே நிதி நெருக்கடியை ஏற்க முடியாது. செப்டம்பர் 1ம் தேதிக்குள் ஒரு கோடியும், செப்டம்பம் 30ம் தேதிக்குள் 3 கோடி மனைவிக்கு வழங்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பில் கூறினார்.

Source: Dinamalar

Image Courtesy: Dinamalar

https://www.dinamalar.com/news_detail.asp?id=2825747

Next Story
கதிர் தொகுப்பு
Trending News