Begin typing your search above and press return to search.
ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை அமல்படுத்த இறுதிக்கெடு விதித்த உச்சநீதிமன்றம்.!
ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை அடுத்த மாதம் ஜூலை 31ம் தேதிக்குள் அமல்படுத்த வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

By : Thangavelu
ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் மூலம் தொழிலாளர்கள் தங்களுக்கு வேண்டிய இடங்களில் பொருட்களை வாங்கிக்கொள்ள முடியும். ஒருவர் தனது மாநிலத்தில் இருந்து பெறுகின்ற பொருட்களை வேறு ஒரு மாநிலத்திற்கு சென்ற பின்னரும் வாங்கிக்க முடியும். ஆனால் சில மாநிலங்கள் அந்த திட்டத்தை அமல்படுத்தாமல் காலம் தாழ்த்தி வருகிறது.
இந்நிலையில், ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை அடுத்த மாதம் ஜூலை 31ம் தேதிக்குள் அமல்படுத்த வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்ற மாநிலங்களில் பணிபுரிகின்ற இடத்திலேயே பெற்றுக்கொள்ள முடியும்.
Next Story
