Kathir News
Begin typing your search above and press return to search.

சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு ரத்து விவகாரம்.. உச்சநீதிமன்றம் பிறப்பித்த புதிய உத்தரவு.!

இது மாணவர்களின் நலனையும் கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அனைவரிடமும் கருத்து கேட்ட பின்னர்தான் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே நாங்கள் தீர்ப்பு வழங்க முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு ரத்து விவகாரம்.. உச்சநீதிமன்றம் பிறப்பித்த புதிய உத்தரவு.!
X

ThangaveluBy : Thangavelu

  |  22 Jun 2021 5:57 PM IST

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பொதுத்தேர்வுகளை நடத்த முடியாத சூழல் நிலவியது. இதனை தொடர்ந்து பிரதமர் மோடி சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து உத்தரவிட்டார். இதே போன்று மற்ற மாநிலங்களும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து உத்தரவிட்டது. இதற்கு பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில், சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதற்கு தடைவிதிக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர் மற்றும் தினேஷ் மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கருத்து கூறிய நீதிபதிகள், சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ வாரியங்களின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது.

இது மாணவர்களின் நலனையும் கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அனைவரிடமும் கருத்து கேட்ட பின்னர்தான் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே நாங்கள் தீர்ப்பு வழங்க முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News