வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு: தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு.!
வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

By : Thangavelu
வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தமிழக அரசு பணியில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இடஒதுக்கீடு வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி போராட்டம் நடத்தி வந்தார். இதனை தொடர்ந்து அதிமுக அரசு கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக ஆளுநரும் ஒப்புதல் அளித்தார். இதனை எதிர்த்து மதுரையைச் சேர்ந்த அபிஷ்குமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்நிலையில், மனுவை விசாரித்த நீதிபதிகள் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டிற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டனர். மேலும், அபிஷ்குமார் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவுக்கு பாமகவினர் மட்டுமின்றி ஒட்டுமொத்த வன்னியர்களும் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
