Kathir News
Begin typing your search above and press return to search.

அரசியலமைப்பின் கீழ் சட்டத்தின் ஆட்சியை பாதுகாக்க சமூக ஊடகங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் - நீதிபதி பரபரபரப்பு கருத்து

'தீர்ப்புகளில் பொது மக்களின் கருத்தை பிரதிபலிக்க முடியாது என உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே.பி.பார்த்திவாலா கூறியுள்ளார்.

அரசியலமைப்பின் கீழ் சட்டத்தின் ஆட்சியை பாதுகாக்க சமூக ஊடகங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் - நீதிபதி பரபரபரப்பு கருத்து

Mohan RajBy : Mohan Raj

  |  4 July 2022 7:16 AM GMT

'தீர்ப்புகளில் பொது மக்களின் கருத்தை பிரதிபலிக்க முடியாது என உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே.பி.பார்த்திவாலா கூறியுள்ளார்.


டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே.பி.பார்த்திவாலா பேசியதாவது, 'நீதிமன்ற தீர்ப்புகள் பொதுமக்கள் கருத்துக்களின் பிரதிபலிப்பாக இருக்க முடியாது,

எனவே உச்சநீதிமன்றமே சட்டத்தின் ஆட்சியை மனதில் வைத்து செயல்பட வேண்டும். சட்டத்தின் ஆட்சி என்ற ஒன்றை மட்டும் மனதில் வைத்து உச்ச நீதிமன்றம் முடிவு எடுக்க வேண்டும் என நான் உறுதியாக நம்புகிறேன்.

ஜனநாயகத்தை நான் நம்புகிறேன், ஜனநாயகத்தில் மிகவும் முக்கியமானது சட்டம் லட்சுமணன் ரேகை, நீதிபதிகள் மீது தனிப்பட்ட தாக்குதல்களை மேற்கொள்வது ஆபத்தானது என்பதால் அரசியலமைப்பின் கீழ் சட்டத்தின் ஆட்சியை பாதுகாக்க நாட்டில் டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகங்கள் கட்டாயமாக கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

ஒரு நீதிபதி ஒரு விதிவிலக்கான வழக்கில் சமூகத்தின் உணர்வுகளையும் அவர் வழங்கவிருக்கும் தீர்ப்பின் விளைவே மனதில் வைக்க வேண்டும். நீதிபதிகள் சமூக வலைதள விவாதங்களில் பங்கேற்க கூடாது, நீதிபதிகள் தங்கள் நாக்கின் மூலம் ஒருபோதும் பேச மாட்டார்கள் அவர்கள் தங்கள் தீர்ப்புகளின் மூலமே பேசுவார்கள்' இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Source - Maalai Malar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News