Begin typing your search above and press return to search.
எல்லைகளை கண்காணிக்க ரூ.4000 கோடியில் செயற்கைக்கோள்: மத்திய அரசு திட்டம்!

By :
எல்லை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் இந்திய ராணுவத்தின் திறனை மேம்படுத்துகின்ற நோக்கில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் சார்பில் ரூ.4,000 கோடி மதிப்பீட்டில் தனி செயற்கைக்கோள் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய எல்லைகளை கண்காணிக்க உருவாக்கப்படவுள்ள ஜிசாட் 7பி செயற்கைக்கோள் திட்டத்திற்கான பணிகளை பாதுகாப்பு அமைச்சகத்துடன் இணைந்து இஸ்ரோ நிர்வாகம் மேற்கொள்ளும் என்று பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தகவல் கூறுகின்றது.
ஏற்கனவே இந்திய கடற்படை மற்றும் விமானப்படைக்கு என்று தனிப்பட்ட செயற்கைக்கோள்கள் இருக்கின்றது. அதே போன்று இந்திய ராணுவத்தின் பயன்பாட்டுக்காகவும் இந்த செயற்கைக்கோள் உருவாக்கப்பட உள்ளது.
Source: Daily Thanthi
Image Courtesy: Voice Of America
Next Story