Kathir News
Begin typing your search above and press return to search.

மகளின் ஐ.டி. தொழிலுக்காக ஷார்ஜா அதிகாரியிடம் பினராயி விஜயன் பேசியுள்ளார் - ஸ்வப்னா வாக்குமூலம்

மகளின் ஐ.டி. தொழிலுக்காக ஷார்ஜா அதிகாரியிடம் பினராயி விஜயன் பேசியுள்ளார் - ஸ்வப்னா வாக்குமூலம்

ThangaveluBy : Thangavelu

  |  16 Jun 2022 7:59 AM GMT

தங்கம் கடத்தல் வழக்கில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த பின்னர் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக நீதிமன்றத்தில் ஸ்வப்னா சுரேஷ் கடந்த 6ம் தேதி ரகசிய வாக்குமூலம் அளித்திருந்தார்.

அதன் பின்னர் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கடத்தல் வழக்கில் தொடர்பு இருப்பதாக பரபரப்பான ஸ்வப்னா பேட்டி அளித்தார். இது கேரளா மட்டுமின்றி நாடு முழுவதும் பரபரப்பாக பேசபட்டு வருகிறது. மேலும், முதலமைச்சரின் கிளிஃப் ஹவுசில் பலமுறை முதலமைச்சர் பினராயி விஜயனையும் அவரது குடும்பத்தினரையும் சந்திதுள்ளேன். அதற்கான ஆதாரங்களையும் தனது வாக்குமூலத்தில் வெளியிடுவேன் என ஸ்வப்னா சுரேஷ் கூறியிருந்தார்.

இந்நிலையில், ஸ்வப்னா நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலம் பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. ஸ்வப்னா சுரேசின் வாக்குமூலத்தில் கடந்த 2017ம் ஆண்டு ஷார்ஜா அரசு அதிகாரி கேரளாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

அப்போது திருவனந்தபுரத்தில் வைத்து முதலமைச்சர் பினராயி விஜயனும் அவரது குடும்பத்தாரும் ஷார்ஜா அரசு அதிகாரியை சந்தித்து பேசினர். அதாவது அரசு விவகாரம் மட்டுமின்றி தனிப்பட்ட சிலவற்றையும் பினராயி விஜயன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அந்த சமயத்தில் தான் மட்டுமின்றி மற்ற அதிகாரிகளையும் அனுமதிக்காமல், பினராயி விஜயனின் மனைவி, அவரின் மகள் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரியான சிவசங்கர், நளினி நட்டோ உள்ளிட்டோர்கள் கதவை அடைத்துக்கொண்டு பேச்சு வார்த்தை நடத்தினர்.

அதாவது ஷார்ஜாவில் மகளின் ஐ.டி. பிசினஸை நடத்துவதற்காக அந்நாட்டு அரசு அதிகாரியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இது குறித்து ஷார்ஜா தகவல் தொழில்நுட்ப அமைச்சரை தொடர்புகொண்டு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேசியுள்ளார். இந்த விஷயம் ஷார்ஜா அதிகாரி கோவளத்துக்கு வந்த நேரத்தில் எனக்கு தெரியவந்தது.

பிசினஸ் பேச்சுவார்த்தை சமயத்தில் ஷார்ஜா அதிகாரியின் மனைவிக்கு ஒரு பரிசு அளிக்க பினராயி விஜயன் தரப்பு முயற்சி செய்தது. அதற்கு அந்த அதிகாரியின் மனைவி சம்மதம் தெரிவிக்கவில்லை.

அப்போது திருவந்தபுரம் யு.ஏ.இ. தூதரகத்தில் இருந்து சாதாரண பிரியாணி பாத்திரத்தை விட பெரிய அளவிலான பாத்திரத்தில் பிரியாணி என்ற பெயரில் முதலமைச்சரின் கிளிஃப் ஹவுசிக்கு பார்சல்கள் அனுப்பப்பட்டது. பார்சல்கள் அனைத்தும் பாயில்ட் பேப்பரால் சுற்றப்பட்டிருந்தது. அதில் என்ன இருக்கிறது என்பதை யாராலும் பார்க்க முடியாது. பிரியாணி அண்டாவை 4 பேர் தூக்கி சென்றனர். அதுவும் சாதாரண காரில் எடுத்து செல்ல முடியாததால் தூதரக அதிகாரியின் காரில் கொண்டுசெல்லப்பட்டது. இவ்வளவு ஒரு பெரிய பிரியாணி பார்த்திரம் அங்கு செல்வதற்கு ஐ.ஏ.எஸ். அதிகாரியான சிவசங்கர் ஒரு வழியாகாட்டியாக இருந்தார் என்று வாக்குமூலத்தில் ஸ்வப்னா அளித்துள்ளார்.

Source, Image Courtesy: Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News