Kathir News
Begin typing your search above and press return to search.

காஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் மீது TADA நீதிமன்றத்தில் கடத்தல் வழக்கில் வழக்குப் பதிவு!

காஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் மீது TADA நீதிமன்றத்தில் கடத்தல் வழக்கில் வழக்குப் பதிவு!

காஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் மீது TADA நீதிமன்றத்தில் கடத்தல் வழக்கில் வழக்குப் பதிவு!

Saffron MomBy : Saffron Mom

  |  12 Jan 2021 6:30 PM GMT

ருபையா சயீத்தின் சதி கடத்தல் வழக்கில் இஸ்லாமிய அடிப்படைவாதியும் மற்றும் ஜம்மு & காஷ்மீரில் தடை செய்யப்பட்டுள்ள ஜம்மு&காஷ்மீர் விடுதலை முன்னணி அமைப்பின்(JKLF) தலைவருமான யாசின் மாலிக் மீது TADA சிறப்பு நீதிமன்றம் வழக்குப் பதிவு செய்துள்ளது.

1989 இல் மத்திய உள்துறை அமைச்சர் முப்தி முகமது சயீத் மகள் ருபையாவை யாசின் மாலிக் மற்றும் அவரது கூட்டாளிகள் கடத்தினர். இந்த சம்பவமானது காஷ்மீரில் இஸ்லாமியப் போராட்டங்கள் தொடங்கிய காலகட்டம், அதனைத் தொடர்ந்து காஷ்மீரில் பெருமளவில் பண்டிதர்கள் வெளியேற்றப்பட்டனர்.

மத்திய புலனாய்வு அமைப்பு பதிவு செய்த குற்றப் பத்திரிகையில், ஸ்ரீநகரில் உள்ள லால் டெட் மருத்துவமனையில் பயிற்சி பெற்றுவந்த ரூபாயாவை கடத்தியதற்குக் காரணம் அவர்களது கூட்டாளிகளை விடுவிக்கக் கோரி நடத்தப்பட்டது என்று எழுதப்பட்டிருந்தது. சயீத் 1989 இல் டிசம்பர் 8 இல் கடத்தப்பட்டு டிசம்பர் 11 இல் விடுவிக்கப்பட்டார். மேலும் 1990 இல் TADA நீதிமன்றம் மாலிக் மற்றும் அவர்களது கூட்டாளிகள் ஆறு பேர் மீது இந்திய விமானப் படை அதிகாரிகள் நான்கு பேரைக் கொலை செய்ததற்காக வழக்குப் பதிவு செய்தது. தற்போது மாலிக் டெல்லி திஹார் சிறையில் உள்ளார்.

2019 இல் காஷ்மீரில் புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து மத்திய அரசாங்கத்தால் 2019 இல் மாலிக்கின் தீவிரவாத அமைப்பான JKLF தடைசெய்யப்பட்டது. இந்த நடவடிக்கையானது பள்ளத்தாக்கில் பல தீவிரவாத நடவடிக்கைகள் அதிகாரத்தைத் தொடர்ந்து பயங்கரவாத தடை சட்டம் பிரிவு 3 இன் கீழ் கொண்டுவரப்பட்டது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News