Kathir News
Begin typing your search above and press return to search.

கேரளாவைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதி நிமிஷா பாத்திமா தலிபான்களால் விடுதலை! பயங்கரவாதியை மீட்க கோரும் போராளிகள் !

4 women from Kerala had converted into Islam, married terrorists and had gone to fight for ISIS in 2016. They were in Afghan jails. The Taliban has reportedly broken the jails of Badam Bagh and Pul-e-Charkhi in Kabul and freed all the inmates, most of whom were terrorists.

கேரளாவைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதி நிமிஷா பாத்திமா தலிபான்களால் விடுதலை! பயங்கரவாதியை மீட்க கோரும் போராளிகள் !

Fathima who was earlier Nimisha, Visual of prisoners broken free by Taliban, Taliban in Afghanistan, images via Twitter

MuruganandhamBy : Muruganandham

  |  18 Aug 2021 7:13 AM GMT

NBC ஊடக செய்தியாளர் ரிச்சர்ட் ஏங்கல் காபூல் சிறையிலிருந்து தலிபான்களால் விடுவிக்கப்பட்ட கைதிகளின் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

விடுதலை செய்யப்பட்ட கைதிகளில், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர முயற்சித்த எட்டு கேரளர்களும் இருந்ததாக உளவுத்துறை தகவலின் அடிப்படையில் வெளியான மாத்ருபூமி ஊடக அறிக்கை கூறுகிறது. ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய பிறகு, காபூலில் உள்ள பாதம் பாக் மற்றும் புல்-இ-சர்கி சிறைகளில் இருந்து 5,000 க்கும் மேற்பட்ட தலிபான் மற்றும் அல்கொய்தா பயங்கரவாதிகளை விடுவிப்பதற்காக தலிபான்கள் சிறையை உடைத்தனர்.


விடுவிக்கப்பட்டவர்களில் கேரளாவைச் சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி நிமிஷா பாத்திமாவும் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக ஜிஹாதி அமைப்புகளில் சேர சென்ற 21 இந்தியர்கள், ஆப்கான் படைகளால் கைது செய்யப்பட்டனர்.

ஐஎஸ்ஐஎஸ் கட்டுப்பாட்டில் உள்ள கோரசன் மாகாணத்தில் அமெரிக்கப் படைகளுக்கு எதிராகப் போரிடுவதற்காகவும், ஐஎஸ்ஐஎஸ் ஜிஹாதி பயங்கரவாதிகளாக இருப்பதற்காகவும், தனது கணவர் பெக்ஸனுடன் நிமிஷா பாத்திமா 2016 ஜூன் மாதம் கேரளாவிலிருந்து ஆப்கானிஸ்தானுக்கு சென்றார்.

ஃபாத்திமா என்ற நிமிஷா ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதியுடனான திருமணத்திற்கு பிறகு 'பாத்திமா ஈசா' என்று பெயரை மாற்றிக் கொண்டார். கணவர் இறப்புக்கு பிறகு, பாத்திமா 2019 ல் ஆப்கான் அரசிடம் சரணடைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவருடன் சோனியா செபாஸ்டியன் என்ற ஆயிஷா, மெர்ரின் ஜேக்கப் என்ற மரியம் மற்றும் ரஃபேலா சரணடைந்தனர்.

இவர்கள் தற்போது தலிபான்களால் விடுவிக்கப்பட்ட நிலையில், இந்தியா திரும்ப விருப்பம் தெரிவித்தனர். எனினும், பயங்கரவாதிகளை மீட்க அரசு ஆர்வம் காட்டவில்லை.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News