Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவை தாக்க சொல்லி, பாகிஸ்தானுக்கு தலீபான்கள் ஆயுத சப்ளை - உளவுத்துறையிடம் கசிந்த பகீர் தகவல்!

Taliban supply arms to Pakistan in conflict with India

இந்தியாவை தாக்க சொல்லி, பாகிஸ்தானுக்கு தலீபான்கள் ஆயுத சப்ளை - உளவுத்துறையிடம் கசிந்த பகீர் தகவல்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  15 April 2022 12:45 AM GMT

கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்டில், ஆப்கானிஸ்தானில் இருந்து, அமெரிக்க படைகள் முழு அளவில் வாபஸ் பெறப்பட்டது. ராணுவ சாதனங்கள், ஆயுதங்களை பெருமளவில் அப்படியே விட்டு சென்றது. அவை அனைத்தும் தலீபான்கள் வசம் சென்றுவிட்டன.

ஆட்சி வந்த பின்னர், ஆப்கானிஸ்தானை பயங்கரவாதத்திற்கு பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம். இந்த ஆயுதங்களும் பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்படாது என்று தெரிவித்தனர்.

ஆனால், முரணாக ஆயுத சப்ளையில் ஈடுபடுவது தெரிய வந்துள்ளது. கனடாவை மையமாக கொண்டு செயல்பட கூடிய சர்வதேச உரிமைகள் மற்றும் பாதுகாப்பு கூட்டமைப்பு இதுபற்றி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியான அறிக்கையில், ஆயுத கடத்தல்களை தடுக்க முறையான பாதுகாப்பு சோதனைகளை நடத்தி வருகிறோம். ஏனெனில் நாங்கள் முன்னேறி விட்டோம் என தலீபான்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

ஆனால், ஆப்கானிஸ்தானில் ஆயுத சந்தை முழு அளவில் வளருகிறது. பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் கடத்தப்படுகின்றன. கடைசியில் அவை இந்தியாவுக்கு எதிராக எல்லை கடந்த பயங்கரவாத செயல்களில் ஈடுபட பயன்படுத்தப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத ஆயுத கடத்தலை கட்டுப்படுத்த தவறியதற்காக பாகிஸ்தான் மிக பெரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

'அதிக அளவில் இந்த ஆயுதங்களை வைத்திருக்கும் பிரிவினைவாத, பயங்கரவாத அமைப்புகள் செயல்படும்போது, அந்த நாடே முதலில் பாதிக்கப்படும் என்று அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News