உலகின் தொன்மையான மொழி தமிழ் மொழிதான்: பிரதமர் புகழாரம்.\!
உலகின் தொன்மையான மொழி தமிழ் மொழிதான்: பிரதமர் புகழாரம்.\!

தமிழகத்தில் 12 லட்சம் இலவச வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல நகரங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுகிறது என்றார். தமிழகத்தில் 14 லட்சம் குடிநீர் இணைப்புகள் கிராமங்களில் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.3 ஆண்டுகளில் 7 ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும் என்று கூறிய மோடி, குறு சிறு தொழில்கள்துறைதான் தற்சார்பு பொருளாதாரத்துக்கு மதிப்பு சேர்த்துள்ளதாக தெரிவித்தார்.
கோவை பகுதியில் மத்திய அரசின் கடனுதவி திட்டங்கள் பெருமளவில் சென்றடைந்துள்ளன. சிறிய விவசாயிகளுக்காக மத்திய அரசு பணியாற்றி வருகிறது என்றார்.
விவசாயிகளின் கடன் அட்டை, மண் பரிசோதனை அட்டை ஆகியவற்றை செயல்படுத்துகிறோம். பிரதமரின் கிஷான் திட்டத்தால் பல கோடி விவசாயிகள் பயனடைந்துள்ளனர். வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை செயல்படுத்தியது மத்திய அரசு என்று தெரிவித்தார்.
சிறுகுறு தொழில்கள் மேம்பாட்டுக்கு சாம்பியன் என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. சிறுகுறு தொழில் நிறுவனங்களின் வழக்குகளுக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். தமிழகத்தின் பெருமையை தெரிவித்த மோடி, தமிழ் மொழி தொன்மையானது. தமிழகத்தில் நடைபெறும் கலாச்சார விழாக்கள் புகழ் பெற்றவை என்று குறிப்பிட்டார். தமிழ் வழியில் மருத்துவம் படிக்கலாம் என்று கூறிய மோடி, மருத்துவம், பொறியியல் படிப்புகளை உள்ளூர் மொழியில் படிப்பதன் மூலம் இளைஞர்கள் பயனடைவார்கள் என்றும் தெரிவித்தார்.