Kathir News
Begin typing your search above and press return to search.

6 மாதங்களாக தமிழகம் முதலிடம்.. இசஞ்சீவனி திட்டத்தில் பயன்பெறுவதில் சாதனை.!

6 மாதங்களாக தமிழகம் முதலிடம்.. இசஞ்சீவனி திட்டத்தில் பயன்பெறுவதில் சாதனை.!

6 மாதங்களாக தமிழகம் முதலிடம்.. இசஞ்சீவனி திட்டத்தில் பயன்பெறுவதில் சாதனை.!
X

Rama SubbaiahBy : Rama Subbaiah

  |  21 Nov 2020 1:00 AM IST

கொரோனா உச்சத்தில் சென்ற நிலையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் பொது மக்கள் வேட்டை விட்டு வெளியே வரமுடியவில்லை. வெளியே சென்றாலும் கிளினிக்குகள் மூடப்ப்பட்டே கிடந்தன. இந்நிலையில், சாதாரண நோய்க்கு வீட்டில் இருந்தவாறே ஆலோசனை பெற, 'இ - சஞ்சீவனிஓபிடி' என்ற, இலவச காணொலி மருத்துவ ஆலோசனைத் திட்டத்தை, மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

இதில், 1.55 லட்சம் சுகாதார நிலையங்கள் இணைக்கப்பட்டுள்ளன. நான்காயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பணியாற்றி வருகிறார்கள். காலை, 10:00 முதல் மாலை , 3:00 மணி வரை ஆலோசனை வழங்கப்படுகிறது.

இதன்படி, https://esanjeevaniopd.inல் புதிதாக பதிவு செய்வோர், பேஷன்ட் ரிஜிஸ்ட்ரேஷனை கிளிக் செய்து, தங்களை பற்றிய விவரங்களை பதிவு செய்ய வேண்டும். டோக்கன் எண் வரிசை வரும் போது, டாக்டர் வீடியோ மூலம் நம்முடன் இணைவார்.

அவரிடம் உடல் நிலை குறித்து ஆலோசனை பெறலாம். பின், டாக்டர் தரும் மின்னணு மருந்து பரிந்துரை சீட்டை பதிவிக்கம் செய்து, மருந்து வாங்கலாம். இத்திட்டம், மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் கடந்த மே முதல், மருத்துவ ஆலோசனை பெறுவதில், இந்திய அளவில், தமிழகம் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது.

நேற்றையவரை இ-சஞ்சீவனி தளத்தில் 8 லட்சத்துக்கும் (8,00,042) அதிகமான தொலைதூர மருத்துவ ஆலோசனைகள் இதுவரை நாடு முழுவதும் வழங்கப்பட்டுள்ளன.

இதில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.தமிழ்நாட்டில் 2,59,904 தொலைதூர ஆலோசனைகளும், உத்தரப் பிரதேசத்தில் 2,19,715 தொலைதூர ஆலோசனைகளும், கேரளாவில் 58,000-மும், இமாச்சலப் பிரதேசத்தில் 46,647-ம், மத்தியப் பிரதேசத்தில் 43,045-ம் இ-சஞ்சீவனி தளத்தின் மூலம் நடைபெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது..

Next Story
கதிர் தொகுப்பு
Trending News