Kathir News
Begin typing your search above and press return to search.

தொழில்துறையில் தமிழகம் முன்னிலை பெற்றுள்ளது: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.!

தொழில்துறை வளர்ச்சியில் தமிழகம் முன்னிலை பெற்றுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

தொழில்துறையில் தமிழகம் முன்னிலை பெற்றுள்ளது: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  14 March 2021 9:21 AM IST

தொழில்துறை வளர்ச்சியில் தமிழகம் முன்னிலை பெற்றுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று அமைச்சர் பேசியதாவது: திமுக சொந்த நலனுக்காக மட்டுமே கவலை அடைந்து வருகிறது. இதனால் தன்னுடைய தோல்விகளை மறைப்பதற்கு முயற்சி செய்கிறது. பெட்ரோல் முற்றிலும் இறக்குமதி செய்யக்கூடியவை ஆகும்.

தொழிற்துறை வளர்ச்சியில் தமிழகம் முன்னிலை பெற்று வருகிறது. அது மட்டுமின்றி சூரிய மின்சாரம் தயாரிப்பதிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது. திமுகவும், காங்கிரசும் வாரிசு அரசியல் செய்யும் கட்சிகள் ஆகும். பாரதிய ஜனதா ஒன்றும் வட இந்திய மாநில கட்சி அல்ல.

பிரதமர் மோடியால் வெளி நாட்டு முதலீடுகள் அதிகரித்துள்ளது. பல்வேறு துறைகளில் முதலீடு செய்வதற்கு தனியார்கள் வரவேற்கப்படுகின்றனர். கடந்த காலங்களில் ஜல்லிக்கட்டை தடை செய்தது, காங்கிரஸ் திமுக கூட்டணி அரசுதான். அதனை மீட்டுக்கொடுத்தது பாஜக அரசு. இவ்வாறு அவர் பேசினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News