குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி !
தமிழகத்தின் 15வது ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆர்.என்.ரவி கடந்த 18ம் தேதி பதவியேற்றுக்கொண்டார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்திப்பு நடத்தினார். அப்போது தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு உள்ளது. அரசியலைப்புச் சட்டப்படி செயல்படுவேன் எனக் கூறினார்.
By : Thangavelu
தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்ற பின்னர் முதன் முறையாக 2 நாட்கள் அரசு முறை பயணமாக இன்று காலை டெல்லி சென்றார். அங்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை சந்தித்துப் பேசினார்.
தமிழகத்தின் 15வது ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆர்.என்.ரவி கடந்த 18ம் தேதி பதவியேற்றுக்கொண்டார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்திப்பு நடத்தினார். அப்போது தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு உள்ளது. அரசியலைப்புச் சட்டப்படி செயல்படுவேன் எனக் கூறினார்.
இதனிடையே நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவை வரவழைத்து மாநில சட்டம் ஒழுங்கு குறித்து கேட்டறிந்தார். இதன் பின்னர் உளவுத்துறை ஏடிஜிபியிடம் கேட்டறிந்தார். இதனால் தமிழக ஆளுநர் தனது பணியை தொடங்கிவிட்டார் என அரசியல் விமர்சகர்கள் மட்டும் ஊடகங்களும் செய்திகள் வெளியிட்டு வந்தது.
இந்நிலையில், ஆளுநராக பதவியேற்ற பின்னர் முதன் முறையாக டெல்லி சென்றுள்ள ஆர்.என்.ரவி குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்தை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இதனை தொடர்ந்து குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரையும் சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Source, Image Courtesy: Topnewstamil