ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு மீன் உள்ளிட்ட கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி செய்ய இலக்கு - மத்திய அரசின் சூப்பர் திட்டம்!

By : Kathir Webdesk
2024-25-ஆம் ஆண்டில் ரூ. 1 லட்சம் கோடி அளவுக்கு மீன் உள்ளிட்ட கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
2024-25-ஆம் ஆண்டில் ரூ. 1 லட்சம் கோடி அளவுக்கு மீன் உள்ளிட்ட கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது இது 43 ஆயிரம் கோடியாக உள்ளது. 2022-23-ஆம் ஆண்டில் ரூ. 60 ஆயிரம் கோடிக்கு கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.
சுத்தமான மீன்கள், குளிர்பதனக் கிடங்குகள் போன்றவை மூலமே நாம் சர்வதேச அளவில் ஏற்றுமதி செய்ய முடியும். எனவே அதைக் கருத்தில் கொண்டே பிரதமரின் மத்சய சம்படா திட்டத்தின் கீழ் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறோம். மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பு உள்கட்டமைப்பை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம்.
அதன் அடிப்படையில் சுமார் 900 கோடி மதிப்பில் சென்னை, கொச்சி, விசாகப்பட்டினம் உள்பட 5 மீன்பிடித்துறைமுகங்களை நவீனப்படுத்தி மேம்படுத்தி வருகிறோம். அதோடு குளிர்பதனக் கிடங்கு அமைத்தல், மீன் பதப்படுத்தும் நிலையம் அமைத்தல், ஆழ்கடல் மீன் வளர்ப்பு போன்ற திட்டங்களும் செயல்படுத்தப்படும் எனக் கூறியுள்ளார்.
Input From: Uni India
