ஜெகன் மோகன் குறித்து விமர்சனம்: தெலுங்கு தேச கட்சி நிர்வாகி வீடுகள், அலுவலகம் சூறை!
ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி பற்றி அவதூறான வகையில் கருத்து கூறியதை கண்டித்து, தெலுங்கு தேச கட்சியின் மத்திய அலுவலகம் மற்றும் மூத்த நிர்வாகிகளின் வீடுகள் மீது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் தாக்குதலில் ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
By : Thangavelu

தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த செய்தித்தொடர்பாளர் பட்டாபி ராம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது, ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி பற்றி அவதூறான வகையில் பேசியுள்ளார். இது பற்றி கேள்விப்பட்ட ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் மங்களகிரி பகுதியில் உள்ள தெலுங்கு தேச கட்சியின் மத்திய அலுவலகத்திற்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை சூறையாடினர்.
அது மட்டுமின்றி விசாகப்பட்டினம், அமராவதியில் உள்ள கட்சி அலுவலகங்களும், மூத்த தலைவர்களின் வீடுகளும் சூறையாடப்பட்டன. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் தெலுங்கு தேச கட்சியினருக்கும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களிடையே மோதல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இந்த பிரச்சனைகள் கட்டுப்படுத்தும் விதமாக போலீசார் அனைத்து மாவட்டங்களில் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், தாக்குதல் நடத்தியவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில டிஜிபி உறுதியளித்துள்ளார். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை எழும் என்பதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
Source, Image Courtesy: Dinamalar