Kathir News
Begin typing your search above and press return to search.

தேசிய அளவில் ஆசிரியர்களுக்கு இணைய வழிப் போட்டிகள்.!

தற்போது கொரோனா தொற்றால் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கான இணைய வழிக் கருத்தரங்கம், வீடியோ மற்றும் கதை, கவிதை, கட்டுரை, கருத்து வரைபடம் எழுதும் போட்டியையும் அறிவித்துள்ளது. கருத்தரங்கு மற்றும் போட்டிகள் நடத்தப்படும் குறிக்கோள் பள்ளி ஆசிரியர்களிடையே உணவு மற்றும் ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை உண்டாக்குவது.

தேசிய அளவில் ஆசிரியர்களுக்கு இணைய வழிப் போட்டிகள்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  20 July 2021 2:50 PM IST

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனம், மத்தியக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் என்சிஇஆர்டி (NCERT) மற்றும் விபா நிறுவனம் இணைந்து ஒவ்வொரு வருடமும் பள்ளி மாணவர்களின் அறிவியல் திறனை மேம்படுத்துவதற்காகத் தேசிய அளவிலான அறிவியல் திறனறித் தேர்வான ''வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன்'' தேர்வை நடத்தி வருகிறது.

தற்போது கொரோனா தொற்றால் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கான இணைய வழிக் கருத்தரங்கம், வீடியோ மற்றும் கதை, கவிதை, கட்டுரை, கருத்து வரைபடம் எழுதும் போட்டியையும் அறிவித்துள்ளது. கருத்தரங்கு மற்றும் போட்டிகள் நடத்தப்படும் குறிக்கோள் பள்ளி ஆசிரியர்களிடையே உணவு மற்றும் ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை உண்டாக்குவது.

''ஆகார்கிராந்தி" என்ற தலைப்பில் இந்தியா முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்கு இந்த கருத்தரங்கு மற்றும் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. http://shikshashilpi.vvm.org.in/aahaarkranti/ என்ற இணையதளத்தில் 24ம் தேதிக்குள் போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் பதிவு செய்து கொள்ளலாம். இப்போடிகளில் வெற்றி பெறுவோருக்கு சான்றிதழ்களும் ரொக்கப்பரிசுகளும் வழங்கப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News