Kathir News
Begin typing your search above and press return to search.

நாட்டிலேயே முதல் மாநிலமாக ஊரடங்கை முழுமையாக நீக்கும் தெலங்கானா.!

தெலங்கானா மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வரும் சூழலில், அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்பட்டு வருகிறது. தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முதல் முடிகிறது.

நாட்டிலேயே முதல் மாநிலமாக ஊரடங்கை முழுமையாக நீக்கும் தெலங்கானா.!
X

ThangaveluBy : Thangavelu

  |  19 Jun 2021 7:08 PM IST

தெலங்கானா மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வரும் சூழலில், அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்பட்டு வருகிறது. தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முதல் முடிகிறது.

இந்நிலையில், நாளை முதல் ஊரடங்கு முற்றிலுமாக நீக்கப்படுவதாகவும், எந்த ஒரு கட்டுப்பாடுகளும் இனிமேல் விதிக்கப்படாது என்றும் தெலங்கானா அரசு தெரிவித்துள்ளது. அது மட்டுமின்றி ஜூலை 1ம் தேதி முதல் அனைத்து கல்வி நிறுவனங்களையும், திறக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை மாநில அரசு செய்து வருகிறது. நேரடியாக மாணவர்களை வகுப்புகளில் அனுமதிக்கவும் அரசு கூறியுள்ளது.

மேலும், ஊரடங்கின்போது அரசு பிறப்பித்த அனைத்து வகையான கட்டுப்பாடுகளையும் முழு அளவில் விலக்கிக் கொள்வதற்கு அனைத்து துறை சார்ந்த அலுவலங்களுக்கும் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவிலேயே முதன் மாநிலமாக தெலங்கானா அரசு ஊரடங்கை நீக்குகிறது. மற்ற எந்த ஒரு மாநிலங்களிலும் ஊரடங்கு நீக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News