கொரோனா தடுப்பூசி நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து.. 5 பேர் உயிரிழப்பு.!
கொரோனா தடுப்பூசி நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து.. 5 பேர் உயிரிழப்பு.!

By : Kathir Webdesk
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 5 பேர் உயிரிழந்ததாக முதற்கட்டமாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் அமைந்துள்ளது சீரம் நிறுவனம். இந்த நிறுவனத்தில் இருந்துதான் கோவிஷீல்டு என்ற தடுப்பூசி தயாரித்து ஒட்டு மொத்த உலகிற்கும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திடீரென்று இந்த நிறுவனத்தில் இன்று மதியம் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. அலுவலகம் அமைந்துள்ள முதல் தளத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விபத்து பற்றி தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இது பற்றி சீரம் நிறுவனத்தின் அதிகாரிகள் கூறியதாவது: தடுப்பூசி தயாரிக்கும் இடத்தில் இந்த விபத்து ஏற்படவில்லை. தடுப்பூசி தயாரிப்பு கிடங்குகள் பத்திரமாக உள்ளது. யாரும் பயப்பட வேண்டாம். இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என கூறியுள்ளனர்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஒட்டு மொத்த மக்களுக்கும் பயத்தை ஏற்படுத்தி விட்டது என்றே சொல்லாம். தற்போதுதான் நாடு முழுவதும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டால் அனைத்து வீணாகிடும் என்ற பயமும் மக்களிடம் உள்ளது.
