Kathir News
Begin typing your search above and press return to search.

ஹிஜாப் சர்ச்சை மாணவியை புகழ்ந்த அல்கொய்தா தீவிரவாதி! திடீரென்று பிரச்சனை ஏன் கிளம்பியதுன்னு இப்போ புரிகிறதா.?

Terror org Al-Qaeda chief recites poem for burqa-clad protestor during Karnataka hijab row

ஹிஜாப் சர்ச்சை மாணவியை புகழ்ந்த அல்கொய்தா தீவிரவாதி! திடீரென்று பிரச்சனை ஏன் கிளம்பியதுன்னு இப்போ புரிகிறதா.?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  6 April 2022 8:52 AM GMT

இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான அல்-கொய்தாவின் தலைவர் கர்நாடகாவின் உடுப்பியில் இந்து மாணவர்களை ஆத்திரமூட்டும் வகையில் "அல்லாஹு அக்பர்" என்று கூச்சலிட்ட பர்தா அணிந்த மாணவி முஸ்கன் ஜைனப் கானுக்கு தனது ஆதரவை வழங்கினார்.

அல்-கொய்தாவின் அதிகாரப்பூர்வ ஊடகம் வெளியிட்ட ஒன்பது நிமிட வீடியோவில், அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி, "அல்லாஹு அக்பர்" கோஷங்களை எழுப்பிய பின்னர் பிரபலமான மாணவி முஸ்கன் கானைப் பாராட்டினார். பிறகு அவரை பாராட்டி கவிதை ஒன்றையும் வாசித்தார்.

வீடியோக்கள் மற்றும் சமூக ஊடகங்களில் இருந்து முஸ்கான் கான் பற்றி அறிந்து கொண்டதாக அந்த பயங்கரவாதி கூறினார். முஸ்கன் கானை 'சகோதரி' என்று குறிப்பிட்டார்.

இந்திய முஸ்லிம்களுக்கு எதிராக இந்திய அரசால் நடத்தப்பட்ட "அடக்குமுறைக்கு" எதிர்வினையாற்ற வேண்டும் என்று தூண்டிவிடும் வகையில் பேசினார்.

மாணவி முஸ்கன் ஜைனப் கான் யார்?

முஸ்கன் ஜைனப் கான் கர்நாடக மாநிலம் மாண்டியாவில் உள்ள பிஇஎஸ் கலை, அறிவியல் கல்லூரியின் மாணவி. ஹிஜாப் அணிந்து வந்து "அல்லாஹு அக்பர்" என்று கத்திய பிறகு பிரபலமானார். முஸ்கன் ஜைனப்தந்தை மூலம் தீவிர இஸ்லாமிய அமைப்பான PFI உடன் தொடர்பு வைத்திருப்பது பின்னர் தெரியவந்தது . பிபி முஸ்கன் ஜைனப் PFI தலைவர் அப்துல் சுகூரின் மகள். மகாராஷ்டிர காங்கிரஸ் எம்எல்ஏ (பாந்த்ரா) ஜீஷன் சித்திக், மாண்டியாவில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்று கானிடம் தனது துணிச்சலான செயலுக்காக ஐபோன் மற்றும் ஸ்மார்ட்வாட்சை வழங்கினார். இஸ்லாமிய அமைப்பான ஜமியத் உலமா-இ-ஹிந்த் மேலும் ரொக்கப் பரிசாக முஸ்கான் கானுக்கு 5 லட்சம் வழங்கியது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News