Kathir News
Begin typing your search above and press return to search.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதங்கள் குறைந்துள்ளது: மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி வரை 206 பயங்கரவாத சம்பவங்கள் நடைபெற்று இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதங்கள் குறைந்துள்ளது: மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்!
X

ThangaveluBy : Thangavelu

  |  15 Dec 2021 12:06 PM GMT

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி வரை 206 பயங்கரவாத சம்பவங்கள் நடைபெற்று இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

இது குறித்து மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்துள்ள உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், கடந்த 2020 மற்றும் 2019 ஆண்டுகளில் முறையே 244 மற்றும் 255 பயங்கரவாத சம்பவங்கள் நடைபெற்றிருப்பதாக கூறினார்.

மேலும், கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு பின்னர் ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாதுகாப்பு நிலைமை மிகவும் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதால், எல்லை தாண்டும் அண்டை நாட்டு பயங்கரவாதிகளின் முயற்சிகள் குறைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Source: Puthiythalamurai

Image Courtesy:Ndtv

Next Story
கதிர் தொகுப்பு
Trending News