Begin typing your search above and press return to search.
காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிசூடு - பயங்கரவாதி சுட்டுக்கொலை!
காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிசூடு - பயங்கரவாதி சுட்டுக்கொலை!

By : Bharathi Latha
காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பயங்கரவாதி 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தெற்கு காஷ்மீரின் ஷோபியன் மாவட்டத்தில் கனிகாம் என்ற கிராமத்தில் நேற்று பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதனையடுத்து அந்த பகுதியை போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர்.

பயங்கரவாதிகள் பதுங்கி இருந்தபடி தாக்குதல் நடத்தி வந்ததால், வெகு நேரமாக இரு தரப்பினருக்கும் இடையே மோதல் நீடித்தது. பின்னர் இரவு நேரத்தில் தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை. அதனை தொடர்ந்து இன்று காலை மீண்டும் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதனை எதிர்த்து பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டார். மேலும் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்த வீரர்களுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் தொடர்ந்து பாதுகாப்பு படையினரும், போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
