Kathir News
Begin typing your search above and press return to search.

மாவோயிஸ்டில் இருந்து விலகி காவல்துறையில் சேர்ந்ததால் சொந்த சகோதரரைக் கொலை செய்த கொடூரம்.!

மாவோயிஸ்டில் இருந்து விலகி காவல்துறையில் சேர்ந்ததால் சொந்த சகோதரரைக் கொலை செய்த கொடூரம்.!

மாவோயிஸ்டில் இருந்து விலகி காவல்துறையில் சேர்ந்ததால் சொந்த சகோதரரைக் கொலை செய்த கொடூரம்.!

Saffron MomBy : Saffron Mom

  |  30 Jan 2021 12:03 PM GMT

வியாழக்கிழமை அன்று சத்தீஸ்கரில் ஒரு அதிர்ச்சியளிக்கும் சம்பவமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில்(CPI(mavoist)) இருந்து வெளியேறி பிஜாப்பூர் மாவட்டத்தில் காவல்துறையில் சேர்ந்தவரைச் சொந்த சகோதரரே கொலை செய்துள்ளார். மேலும் அறிக்கையில் கொலை செய்யப்பட்டவர் சோமடு ராம் போயம் என்றும் அவர் மாவோயிஸ்ட்டில் கமண்டராக இருந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலியானவர் 2014 இல் CPI யில் இருந்து விலகி பிஜாப்பூரில் சரணடைந்துள்ளார். அதன் பின்னர் அவர் DRG யில் இணைந்து பிஜாப்பூர் காவல்நிலையத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பே இவர் தனது சொந்த கிராமத்திற்குச் சென்றுள்ளார். வியாழக்கிழமை இரவு இவரது சகோதரர் கோஷா மற்றும் பிற மாவோயிஸ்ட்கள் கூர்மையான ஆயுந்தகளால் குத்தி கொலை செய்துள்ளனர். மேலும் கொலையாளிகள் குடும்ப உறுப்பினர்கள் முன்னரே கொலை செய்யப்பட்டவரின் உடலுக்கு தீ வைத்துவிட்டுத் தப்பிவிட்டனர்.
காவல்துறை வெள்ளிக்கிழமை சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து தடயங்களைச் சேகரித்தனர். மேலும் கோஷா மற்றும் பிற குற்றவாளிகளைத் தேடும் முயற்சியில் உள்ளதாகவும் IG சுந்தராஜ் தெரிவித்தார். இதேபோன்று செவ்வாய்க்கிழமை அன்று இரண்டு கிராம மக்கள் மாவோயிஸ்ட்களால் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் கடந்த ஐந்து நாட்களில் சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்கள் ஆறு பேரைக் கொலை செய்துள்ளனர். மேலும் 2020 இல் பாஸ்டரில் மோவிஸ்ட் உடனான நடந்த தாக்குதலில் 36 காவல்துறையினர் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்துள்ளனர். மேலும் அந்த ஆண்டில் மாவோயிஸ்ட்கள் நடத்திய 308 தாக்குதலில் 46 குடிமக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் இதேபோன்று ஒரு சம்பவமாகக் கடந்த ஆண்டு மாவோயிஸ்ட்டிலிருந்து விலகி காவல்துறையில் பணிபுரிந்த நபரை அவரது சகோதரர் சுட்டுக் கொலை செய்துள்ளார்.
Next Story
கதிர் தொகுப்பு
Trending News