உச்ச நீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு மதிக்கும்! நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரை!
உச்ச நீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு மதிக்கும்! நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரை!
![உச்ச நீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு மதிக்கும்! நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரை! உச்ச நீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு மதிக்கும்! நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரை!](https://kathir.news/static/c1e/client/83509/uploaded/685c573d291b466ec708af9ca86882ab.jpg)
நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் இரண்டு அவைகளிலும் ஜனாதிபதி உரையாற்றி கூட்டத்தை தொடங்கி வைத்தார். கொரோனா தொற்றுக்கு இடையில், டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்திற்கு நடுவில் இன்று நடைபெறும் கூட்டத்தொடர் அரசியல் வட்டாரத்தில் மட்டுமின்றி, பொதுமக்களாலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நாடாளுன்ற கூட்டத்தில் ஜனாதிபதி பேசியதாவது: மத்திய, மாநில அரசுகள் இடையிலான ஒத்துழைப்பு, ஜனநாயகத்தை மேலும் வலிமைப்படுத்து விதமாக அமைந்துள்ளது. விவசாயிகளின் விளைபொருட்கள் மீதான குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
மேலும், ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டத்தால் பலர் பயன் பெற்றுள்ளனர். ஏழைகள் நல்வாழ்வு திட்டத்தின் மூலம் 6 மாநில மக்கள் பயன் அடைந்துள்ளனர். கொரோனா தொற்று ஏற்பட்டபோது இந்தியா திறம்பட கையாண்டது. இதற்காக உலகம் முழுவதும் பாராட்டு தெரிவித்துள்ளனர். இவ்வாறு அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.