Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவில் முதன் முதலில் இந்த மாநிலத்திற்குதான் கொரோனா தடுப்பூசி.!

இந்தியாவில் முதன் முதலில் இந்த மாநிலத்திற்குதான் கொரோனா தடுப்பூசி.!

இந்தியாவில் முதன் முதலில் இந்த மாநிலத்திற்குதான் கொரோனா தடுப்பூசி.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  16 Dec 2020 1:01 PM IST

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் சுமார் 17 லட்சத்துக்கும் அதிகமானோர்கள் உயிரிழந்தனர். மனித குலத்திற்கு இப்படி ஒரு பேரழிவு எப்போதும் வந்ததில்லை என்று வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.

அந்த வகையில் கொரோனா பாதிப்பில் உலக அளவில் 2வது இடத்தில் இருக்கும் இந்தியாவிலும் கொரோனா தடுப்பு ஊசியை விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சி செய்து வருகின்றது.

இந்நிலையில், தெலுங்கானாவில் வருகிற ஜனவரி மாதம் 2வது வாரத்துக்கு பின் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என மாநில சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீனிவாச ராவ் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக டாக்டர்கள் செவிலியர்கள் உட்பட 2 லட்சத்து 70 ஆயிரம் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என அவர் கூறினார்.

அதற்கு அடுத்த கட்டமாக முன்கள பணியாளர்கள், குறிப்பிட்ட சில துறைகளை சேர்ந்த அரசு பணியாளர்கள் மற்றும் 50 வயதுக்கு அதிகமானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி கிடைக்கும் எனவும் டாக்டர் ஸ்ரீனிவாச ராவ் தெரிவித்தார். முதல் கொரோனா தடுப்பூசி போடும் மாநில பட்டியலில் தெலங்கானா இணைந்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News