முன்பின் தெரியாத ஒரு எதிரியை நாடு சந்திக்க வேண்டிதாயிற்று: மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரை.!
முன்பின் தெரியாத ஒரு எதிரியை நாடு சந்திக்க வேண்டிதாயிற்று: மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரை.!
By : Kathir Webdesk
முன்பின் தெரியாத ஒரு எதிரியை (கொரோனா) நாடு சந்திக்க வேண்டியதாயிற்று என்று மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார்.
மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரையொட்டி மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் மோடி தற்போது உரையாற்றி வருகிறார். அப்போது பிரதமர் பேசியதாவது: முன் பின் தெரியாத ஒரு எதிரியை (கொரோனா) நாடு சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. தற்போது இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகளை உலகமே வியந்து பார்க்கிறது.
நாட்டு மக்களின் நலனுக்காக மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் கேலி செய்கிறது. மத்திய அரசை எதிர்க்கும் நோக்கத்தில் கொரோனா தொற்றின்போது விளக்கேற்றும் நிகழ்வை கூட சில கட்சிகள் கிண்டல் செய்தது. அனைத்து மக்களும் நாட்டின் ஒற்றுமைக்காக விளக்கேற்றினார்கள்.
மேலும், இந்தியாவில் புதிய வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. குறிப்பாக இளைஞர்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்கு கடுமையாக உழைத்து வருகின்ற நாடு இந்தியா ஆகும். குடியரசுத்தலைவர் உரை அனைவருக்கும் சென்று சேர்ந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.