Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவில் கொரோனா ஒருநாள் பாதிப்பு 20 ஆயிரத்திற்கு கீழ் குறைந்து வருகிறது.!

இந்தியாவில் கொரோனா ஒருநாள் பாதிப்பு 20 ஆயிரத்திற்கு கீழ் குறைந்து வருகிறது.!

இந்தியாவில் கொரோனா ஒருநாள் பாதிப்பு 20 ஆயிரத்திற்கு கீழ் குறைந்து வருகிறது.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  22 Dec 2020 4:07 PM IST

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30 ஆயிரம் பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் உடல்நலம் பெற்று மீண்டவர்களின் எண்ணிக்கை 96.36 லட்சத்தை கடந்தது.

தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3 லட்சத்திற்கு கீழ் சென்றது. மேலும் ஒரே நாளில் 19,556 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் ஒரு கோடியே 75 ஆயிரத்தை கடந்தது. 2.92 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,46,111 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 95.65 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.45 ஆகவும் உள்ளது.
மேலும், தற்போது 2.90 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்தியாவில் நேற்று (டிச21) ஒரே நாளில் 10,72,228 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர் கூறியுள்ளது.

இதுவரை இந்தியாவில் 16 கோடியே 31 லட்சத்து 70 ஆயிரத்து 557 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News