இனி உள்நாட்டு பயணிகள் விமானம் இப்படித்தான் இயங்க வேண்டும் - அடுத்த கட்ட தளர்வு அறிவிப்பை வெளியிட்ட மத்திய அரசு.!
இனி உள்நாட்டு பயணிகள் விமானம் இப்படித்தான் இயங்க வேண்டும் - அடுத்த கட்ட தளர்வு அறிவிப்பை வெளியிட்ட மத்திய அரசு.!

By : Muruganandham M
இப்போது உள்நாட்டு விமானங்கள் கொரோனாவிற்கு முன்பு அங்கீகரிக்கப்பட்ட திறனில் இருந்து 80 சதவீத பயணிகளுடன் இயக்க சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வியாழக்கிழமை அறிவித்தது.
மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், நவம்பர் 30 ஆம் தேதி நிலவரப்படி உள்நாட்டு விமான பயண நடவடிக்கைகள் 2.52 லட்சத்தை எட்டியுள்ளன என்பதை வெளிப்படுத்தியதோடு, உள்நாட்டு விமானங்களை 80 சதவீத திறனுடன் இயக்கப்படுவதை உடனடியாக அமல்படுத்த அரசாங்கம் இப்போது அனுமதிக்கும் என்றும் தெரிவித்தார்.
நவம்பர் 11 ம் தேதி சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், உள்நாட்டு விமான சேவை நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை 60 சதவீதத்திலிருந்து 70 சதவீதமாக அங்கீகரிக்கப்பட்ட திறனில் இயக்க அனுமதி வழங்கியது. அதற்கு பிறகு தற்போது பயணிகள் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
விமானக் கட்டணங்களைப் பொறுத்தவரை, நவம்பர் 24 க்குப் பிறகு உள்நாட்டு விமானங்களுக்கான மேல் மற்றும் கீழ் வரம்புகள் இன்னும் மூன்று மாதங்களுக்கு தொடர்ந்து இருக்கும் என்று மத்திய அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார். குறைந்த மற்றும் உயர் கட்டண வரம்புகள் முறையே ரூ .2,000 மற்றும் ரூ .6,000 ஆக இருக்கும்.
சர்வதேச விமான சேவைகளுக்கு வசதியாக உலகம் முழுவதும் தனது ஏற்பாடுகளை விரிவுபடுத்துவதற்கும் அமைச்சகம் செயல்பட்டு வருகிறது. தற்போது, இந்தியா 22 நாடுகளுடன் கையெழுத்திட்டுள்ளது.
அரசாங்கத்தின் மிகப் பெரிய திட்டமான வந்தே பாரத் மிஷன் இந்தியா மே 6 ஆம் தேதி தொடங்கியதிலிருந்து 34 லட்சத்துக்கும் அதிகமான மக்களைச் மீட்டு வந்துள்ளனர். 34 லட்சம் குடிமக்களில், ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மூலம் மட்டுமே திரும்பியதாக விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
