Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் 800 மில்லியன் மக்களுக்கு உணவு தானியங்கள் வழங்கிய மத்திய அரசு.!

கொரோனா பெருந்தொற்று காலத்தில் 800 மில்லியன் மக்களுக்கு உணவு தானியங்கள் வழங்கிய மத்திய அரசு.!

கொரோனா பெருந்தொற்று காலத்தில் 800 மில்லியன் மக்களுக்கு உணவு தானியங்கள் வழங்கிய மத்திய அரசு.!
X

Muruganandham MBy : Muruganandham M

  |  7 Nov 2020 12:30 PM IST

உலக அளவிலான பெருந்தொற்று பாதிப்புக்கு எதிராக தைரியமாக இந்தியா நடவடிக்கைகள் எடுத்ததால், இந்தியாவின் தேசிய குணத்தை உலகம் கண்டுகொண்டது என பிரதமர் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் பேசிய அவர், பொறுப்புணர்வு, கருணை என்ற உணர்வு, தேச ஒற்றுமை, புதுமை சிந்தனை படைப்பின் உத்வேகம் ஆகிய பண்புக்குப் பெயர் பெற்றது இந்தியா என்பதும் முன்னிறுத்தப்பட்டது.

நோய்த் தொற்றை சமாளிக்கும் திறனை இந்தியா அபாரமாக வெளிப்படுத்தியது. வைரஸ் தாக்குதலுக்கு எதிராகப் போராடுவது அல்லது பொருளாதார ஸ்திரத்தன்மை என எதிலும் தன் சமாளிக்கும் திறனைக் காட்டியது. எங்களுடைய நடைமுறைகள், கொள்கைகளுக்கு மக்கள் அளித்த ஆதரவு ஆகியவற்றால், பிரச்சினைகளை சமாளிக்கும் திறன் உருவானது.

எங்களுடைய நிர்வாக பலத்தின் காரணமாக சுமார் 800 மில்லியன் மக்களுக்கு உணவு தானியங்கள், 420 மில்லியன் பேருக்கு பணம், சுமார் 80 மில்லியன் குடும்பங்களுக்கு இலவச எரிவாயு ஆகியவை வழங்க முடிந்தது. சமூக இடைவெளியைக் கடைபிடிக்கும், முகக் கவச உறை அணியும் இந்த மக்கள்தான், வைரஸ் தாக்குதலுக்கு எதிராக வலுவாகப் போரிட்டு வருகிறார்கள். எங்களுடைய நீடித்து செயல்படும் கொள்கைகள் காரணமாகத்தான், உலகில் முதலீட்டுக்கு உகந்த நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவாகியுள்ளது.

பழைய கொள்கைகளில் இருந்து விடுபட்ட புதிய இந்தியாவை நாங்கள் உருவாக்கி வருகிறோம். இன்றைக்கு, இந்தியா மாறி வருகிறது, நன்மைக்காக அந்த மாற்றம் நடைபெறுகிறது. நிதிசார்ந்த பொறுப்பின்மையில் இருந்து, விவேகமான நிதிப் பயன்பாடு வரை, உயர் பணவீக்கத்தில் இருந்து குறைவான பணவீக்கம் வரை, கடன்களை அதிகரிக்கச் செய்யும் வகையில் விருப்பம் போல கடன் தருவதில் இருந்து தகுதியின் அடிப்படையில் கடன் வழங்குதல் வரை, பற்றாக்குறை கட்டமைப்புகள் என்பதில் இருந்து உபரியான கட்டமைப்பு வசதிகள் என்பது வரை, தவறாகக் கையாளப்பட்ட நகர்ப்புற வளர்ச்சி என்பதில் இருந்து முழுமையான சமச்சீரான வளர்ச்சி, இயல்புநிலை கட்டமைப்பு முதல் டிஜிட்டல் கட்டமைப்பு வரை என நல்ல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News