Kathir News
Begin typing your search above and press return to search.

நாட்டிலேயே முதன் முறை ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் மெட்ரோ ரயில்.. பிரதமர் இன்று தொடங்கி வைக்கிறார்.!

நாட்டிலேயே முதன் முறை ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் மெட்ரோ ரயில்.. பிரதமர் இன்று தொடங்கி வைக்கிறார்.!

நாட்டிலேயே முதன் முறை ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் மெட்ரோ ரயில்.. பிரதமர் இன்று தொடங்கி வைக்கிறார்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  28 Dec 2020 7:46 AM GMT

நாட்டிலேயே முதல் முறையாக ஓட்டுநர் இன்றி இயங்கும் மெட்ரோ ரயில் போக்குவரத்தை டெல்லியில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

இந்தியாவின் பிரதமராக மோடி பதவியேற்றதில் நாட்டில் பல்வேறு வகையான உட்கட்டமைப்மை மாற்றி வருகிறார். அதில் ரயில்வே மற்றும் விமான நிலையங்கள், தேசிய சாலைகள் உள்ளிட்டவை அடங்கும். இந்நிலையில், பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: மெட்ரோ ரயில் சேவையில் தொழில் நுட்பத்தின் புதிய வடிவமாக ஓட்டுநர் இல்லாத தானியங்கி தொழில் நுட்பத்தில் இயங்கும் ரயில் சேவை திங்கட்கிழமை அறிமுகப்படுத்தப்படுகிறது.

37 கி.மீ. தூரம் கொண்ட மெஜந்தா நிற லைன், பிங்க் நிற லைனில் மஜ்லிஸ் பூங்கா முதல் ஷிவ் விஹார் வழித்தடத்தில் அறிமுகமாகும் இந்த சேவையை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் திங்கட்கிழமை காலை 11 மணிக்கு தொடங்கி வைக்கிறார்.

மேலும் அனைத்து வழித்தடங்களிலும் பயணிகள் பயன்படுத்தும் வகையிலான தேசிய பொது பயண அட்டையையும் பிரதமர் மோடி அறிமுகப்படுத்துகிறார்.
இந்த அட்டை வைத்திருப்பவர்கள் விமான நிலைய மார்க்கத்தில் இயங்கும் எக்ஸ்பிரஸ் சேவையை அதே நாளில் பயன்படுத்த முடியும்.

டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனம் பிரத்தியேகமாக இந்த அட்டையை உருவாக்கியுள்ளது. இந்த அட்டை மூலம் பஸ் பயண கட்டணம், பிற மார்க்கங்களில் பயணிப்பது உள்ளிட்ட அனைத்தையும் மேற்கொள்ளலாம்.

மேலும், வாகன நிறுத்துமிட கட்டணம், சில்லரை வர்த்தகம் உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News