Kathir News
Begin typing your search above and press return to search.

83 தேஜாஸ் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தின் மிகப்பெரும் முக்கியத்துவம்.!

83 தேஜாஸ் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தின் மிகப்பெரும் முக்கியத்துவம்.!

83 தேஜாஸ் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தின் மிகப்பெரும் முக்கியத்துவம்.!

Saffron MomBy : Saffron Mom

  |  15 Jan 2021 7:30 AM GMT

இந்திய நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய பாதுகாப்பு கொள்முதல் ஒப்பந்தத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாதுகாப்பு அமைச்சரவைக் குழு (CCS) ஒப்புதல் வழங்கியது.

இந்திய விமானப்படைக்கு 83 தேஜாஸ் போர் விமானத்தை கையகப்படுத்த சமீபத்தில் ஒப்புதல் வழங்கியது. சீனா மற்றும் பாகிஸ்தானுடனான எல்லை விவகாரங்களில் தொடர்ந்து நீடிக்கும் பதற்றங்களுக்கு மத்தியில் வழங்கப்பட்டுள்ள இந்த ஒப்புதல் பெறும் முக்கியத்துவம் பெறுகிறது.

தேஜாஸ் போர் விமானத்தின் சமீபத்திய mk1 ரக விமானங்கள் ஏரோநாட்டிகல் டெவலப்மன்ட் ஏஜன்ஸியால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட் தயாரிக்கும். வெளிப்புற சுய பாதுகாப்பு செயலில் மின்னணு முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட வரிசை ,ரேடார் காட்சி எல்லைக்கு அப்பாற்பட்ட ஏவுகணைகள் மற்றும் மேம்பட்ட பராமரிப்பை இது கொண்டுள்ளது. இதற்கு முந்தைய விமானத்தை விட குறிப்பிடத்தக்க அளவு மேம்படுத்துதலை கொண்டுள்ளது.

முந்தைய ஒப்பந்தத்தில் இந்திய விமானப்படை mk1 ரக விமானங்களில் 40 ஜெட் விமானங்களை வாங்கியது. அவற்றில் 20 ஆரம்ப செயல்பாடு விமானம், (16 போர் விமானம், நான்கு பயிற்சி விமானம்) கூடுதலாக 20 இறுதி செயல்பாட்டு அனுமதி விமானம்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்திய விமானப்படை 83 தேஜாஸ் விமானங்களுக்கான ஆரம்ப டெண்டரை வெளியிட்டது. சமீபத்திய கொள்முதல் ஒப்பந்தம் அதனுடைய முக்கிய கட்டமாகும்.இந்த ஒப்பந்தம் இந்தியாவின் சுயசார்பு பாரதத் திட்டத்தை மேலும் ஊக்குவிக்கும். சுமார் 50,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது.

வடிவமைப்பு மற்றும் உற்பத்தி துறைகளில் சிறுதொழில் நிறுவனங்கள் உட்பட 500 இந்திய நிறுவனங்கள் இந்த கொள்முதல் செய்வதில் HAL உடன் இணைந்து செயல்படும்.

அக்டோபர் 2020இல் விமணப்படைத் தளபதி ஆர் கே எஸ் பவுதாரியா அடுத்த பத்தாண்டுகளில் இந்திய விமானப்படை பல்வேறு வடிவமைப்பில் 120க்கும் மேற்பட்ட விமானங்களை பெற முயற்சி செய்யும் என்று அறிவித்தார்.

இந்திய விமானப்படையில் குறைந்து வரும் போர் படைகளை இதற்கான நியாயமான காரணமாக அவர் சுட்டிக்காட்டினார். அனுமதிக்கப்பட்ட 42 போர் படைகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் போர் படைகளின் எண்ணிக்கை 28 அல்லது 29 ஆக குறைந்துள்ளது. சில ஆண்டுகளில் அதன் விமான கடற்படை மேலும் பலவீனமடையும்.

உண்மையில் சொல்லப்போனால் இந்திய விமான படை தலைவர் கூறுகையில், 2030க்குள் 42 படைப்பிரிவுகளை இயக்குவதற்கான நோக்கத்தை பூர்த்தி செய்ய வாய்ப்பில்லை என்று 38 படைப்புகளை நிர்வகிக்க முடியும் என்று குறிப்பிட்டார்.

ஏற்கனவே பாதுகாப்பு கொள்முதலுக்கு இடையூறாக தடைகள் இருந்தது. தற்போது இந்தியாவில் குரானா வைரஸ் தொற்று நோயும் சேர்ந்து கொண்டதால் இந்த பட்ஜெட் இன்னும் மோசமாக கூடும். எனவே 83 தேஜாஸ் விமானங்களை வாங்க ஒப்புதல் வழங்கி இருப்பது இந்திய விமானப்படைக்கு மிகவும் நிவாரணம் தரும் விஷயமாகும்.

2020- 2021ஆம் காண பாதுகாப்பு பட்ஜெட் செலவு திட்டத்தில் இது சுமார் 68 சதவிகிதம் ஆகும். மொத்தம் 45 பில்லியன் ரூபாய். செலவின் முழு தொகையையும் ஒரே நேரத்தில் வெளியேற்ற வேண்டிய அவசியம் இல்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ளலாம்.

இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையில் பதற்றங்கள் அதிகரித்திருப்பது பாதுகாப்பு துறையில் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை தூண்டியுள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. மேலும் சமீபத்திய கொள்முதல் ஒப்பந்தம் பல திட்டங்களில் முதலாவதாக இருக்கலாம். இந்திய விமானப்படை தளபதி பவுதாரியா கூறுகையில், இந்திய விமானப்படைக்கு மிகப்பெரும் லட்சியங்கள் இருந்தபோதிலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஒப்பந்தம் இந்தியாவின் ராணுவ மயமாக்கல் திட்டத்தில் ஒரு முக்கியமான படி ஆகும் என்று தெரிவித்தார்.

With Inputs from: Times Now

Next Story
கதிர் தொகுப்பு
Trending News