Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழ்நாட்டில் இருந்து காஷ்மீர் வரை நீளும் மிஷனரிகளின் கை! முஸ்லிம்களை‌ மதம் மாற்றுவதால் அதிர்ச்சி!

அகப்பே காஷ்மீர் டிரஸ்ட் என்ற பெயரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மதபோதகர் காஷ்மீரில் மிஷனரி அமைப்பு நடத்தி வருகிறார்

தமிழ்நாட்டில் இருந்து காஷ்மீர் வரை நீளும் மிஷனரிகளின் கை! முஸ்லிம்களை‌ மதம் மாற்றுவதால் அதிர்ச்சி!
X

Yendhizhai KrishnanBy : Yendhizhai Krishnan

  |  24 Feb 2021 1:49 PM IST

தமிழகத்தைச் சேர்ந்த நீதிராஜன் என்ற‌‌ மத போதகர் அகப்பே காஷ்மீர் டிரஸ்ட் என்ற அமைப்பை நிறுவி அதன் மூலம் மத மாற்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். தமிழகத்தில் மிஷனரிகள் மத மாற்றத்தில் ஈடுபடுவது ஒன்றும் புதிதில்லை. தமிழக மிஷனரிகள் அண்டை மாநிலங்களிலும் குறிப்பிட்ட வெளிநாடுகளிலும் மதம் மாற்றுவது கூட யாரும் அறியாத விஷயம் அல்ல.

ஆனால் பண்டிட்டுகளை இந்துக்கள் என்பதற்காகவே துரத்தி அடித்த காஷ்மீரில் போய்‌ காஷ்மீரி முஸ்லிம்களையே மதம் மாற்றுவது பலருக்கு புதிய செய்தியாக இருக்கும். மத போதகர் நீதிராஜனும் அந்த செயலில் தான் ஈடுபட்டுள்ளார். இவர் இந்துவாக பிறந்ததாகவும், கடவுளைத் தேடிய பயணத்தில் கிறிஸ்தவ மதத்தைத் தழுவியதாகவும் அகப்பே காஷ்மீர் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அமைப்பு கனடாவில் உள்ள பஞ்சாப் மாசி சர்ச் மற்றும் கசஞ்சியன் பவுண்டேஷன் போன்ற அமைப்புகளிடம் இருந்து நன்கொடை பெற்று செயல்படுகிறது. "காஷ்மீர் பள்ளத்தாக்கிலும் மலைச் சிகரங்களிலும் இயேசு கிறிஸ்துவின் ராஜ்ஜியத்தை நிறுவுவதே" தங்களது நோக்கம் என்று இந்த அமைப்பு குறிப்பிடுகிறது.

மத போதகர் நீதிராஜன் தனது குடும்பத்துடன் ஸ்ரீநகரில் தங்கி இருந்து மத மாற்ற செயல்களில் ஈடுபடுகிறார். வெளிநாடுகளில் இருந்து FCRA உரிமம் மூலம் நன்கொடை பெற்று‌ அதை மத மாற்ற செயல்பாடுகளுக்கு பயன்படுத்துவது விதி மீறல் என்பதால் அகப்பே காஷ்மீர் அமைப்பு மீது உள்துறை அமைச்சகத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அகப்பே காஷ்மீர் அமைப்பு ஒரு குழந்தைகள் காப்பகத்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. மற்றொரு விதி மீறலாக இந்திய நாட்டின் வரைபடத்தை தவறாக காஷ்மீரின் சில பகுதிகளை விட்டு விட்டு பயன்படுத்தியுள்ளனர். இது குறித்தும் உள்துறை அமைச்சகத்துக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News