Begin typing your search above and press return to search.
ஸ்விப்ட் கார் வழங்காததால் மனைவிக்கு போனில் முத்தலாக் வழங்கிய கணவன்!
ஸ்விப்ட் கார் வழங்காததால் மனைவிக்கு போனில் முத்தலாக் வழங்கிய கணவன்!

By : Saffron Mom
முத்தலாக் நடைமுறைக்குத் தடை விதித்த பிறகும் இன்னும் அது நடைமுறையிலிருந்து வருகின்றது. ஹரியானாவில் ஸ்விப்ட் கார் வழங்காததால் தனது மனைவிக்குச் செல் போனில் முத்தலாக் வழங்கியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் முத்தலாக் மற்றும் வரதட்சணை கொடுமையின் கீழ் வழக்குப் பதிவு செய்த பின்னர் பிக்ச்சோர் காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.


பாதிக்கப்பட்ட பெண் நஹீதா கிராமத்தைச் சேர்ந்த அஸ்கர் என்னும் நபரை மே 21 2012 இல் திருமணம் செய்துள்ளார். திருமணத்தின் போது, பெண்ணின் தந்தை பைக், நகை, பணம் மற்றும் பிற பொருட்களை வரதட்சணையாகக் கொடுத்துள்ளார். திருமணத்திற்குப் பிறகு வரதட்சணையில் மகிழ்ச்சியடையாத மாமியார் அந்த பெண்ணை மனரீதியாக மற்றும் உடல்ரீதியாகக் கொடுமை செய்து வந்துள்ளார். மேலும் அவள் மாமியார் ஸ்விப்ட் கார் மற்றும் பணம் கேட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்துள்ள புகாரின் பேரில், 6 டிசம்பர் 2020 இல் அவள் மாமியார் மற்றும் கணவன் அவளை வீட்டை விட்டு வெளியில் அனுப்பியுள்ளனர். அதிலிருந்து அவள் தன் தந்தை வீட்டில் வசித்துவந்துள்ளார். 2 பிப்ரவரியில் அவள் கணவன் சகோதரருக்கு போனில் அழைத்து முத்தலாக் வழங்கியுள்ளான்.


காவல்துறை பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவன் அஸ்கர், மாமியார் ஹஸ்ரா, ரஷீத் மற்றும் யஹ்யா மீது வரதட்சணை கொடுமை மற்றும் துன்புறுத்தல் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.
Next Story
