Kathir News
Begin typing your search above and press return to search.

இந்திய பொருளாதாரம் 2021 - 22ம் ஆண்டில் 10 சதவீதமாக வளர்ச்சியடையும்.. என்.ஐ.டி.ஐ., துணைத் தலைவர்.!

இந்திய பொருளாதாரம் 2021 - 22ம் ஆண்டில் 10 சதவீதமாக வளர்ச்சியடையும்.. என்.ஐ.டி.ஐ., துணைத் தலைவர்.!

இந்திய பொருளாதாரம் 2021 - 22ம் ஆண்டில் 10 சதவீதமாக வளர்ச்சியடையும்.. என்.ஐ.டி.ஐ., துணைத் தலைவர்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  1 Jan 2021 1:32 PM GMT

இந்திய பொருளாதாரம் 2021 22ம் நிதியாண்டில் 10 சதவீதமாக வளர்ச்சியடையும், அடுத்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா தொற்று நிலையால் ஏற்பட்டவை மீட்கப்படும் என்று என்.ஐ.டி.ஐ., ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனியார் செய்தி நிறுவனமான ஏஎன்ஐக்கு அளித்துள் பேட்டியில்: 2020 21ம் ஆண்டின் நான்காம் காலாண்டில் இந்த வளர்ச்சி நேர்மறையான புள்ளி விவரங்களில் இருக்கும்.

தற்போது நடைபெற்று வரும் விவசாயிகளின் ஆர்ப்பாட்டங்கள் பற்றி அவரிடம் கேட்டபோது, புதிய வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு புரிய வைக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது. அவர்கள் ஏஜெண்ட்களிடம் சிக்கி ஏமாறாமல் இருப்பதற்காக அரசாங்கம் தயாராக உள்ளது எனக் கூறினார்.

எப்போதும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதிலும் அவர்களின் வாழ்க்கையின் முன்னேற்றத்துக்காகவும் அரசு உழைத்து வருகிறது.

மேலும் மத்திய அரசின் பண்ணை மசோதாக்களுக்கு எதிரான கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது பற்றி அவரிடம் கேட்டபோது, அவர் அளித்துள் பதில், இந்த எதிர்ப்பு எதிர்ப்புக்காகவே நடக்கிறது என்று நான் நினைக்கிறேன். இந்த சட்டங்கள் பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வருகின்றன.

இப்போது எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் அந்த சட்டத்தை இதற்கு முன்னர் ஆதரித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், விவசாயிகளை தவறாக வழிநடத்துவது மட்டுமின்றி எதிர்க்கட்சியாக இருப்பதற்காக அதனை எதிர்க்கக்கூடாது. இது போன்ற தீர்மானங்கள் நாட்டிற்கும், வீட்டிற்கும் நல்லது இல்லை என கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், விவசாயிகளுக்காக அவர்களின் வருமானத்தை எவ்வாறு அதிகரிப்பது என்பது குறித்து மட்டுமே அரசாங்கம் அக்கறை கொண்டுள்ளது என்று நான் நம்பிக்கையுடன் சொல்கிறேன். இந்த அனைத்து சட்டங்களும் கடந்த கால அரசுகளால் கொண்டு வரப்பட்டவை ஆகும். விவசாயிகள் மத்தியில் உள்ள அச்சத்தை தீர்க்க மத்திய அரசு தயாராக உள்ளது. இதனை விவசாயிகள் விரைவில் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News