Kathir News
Begin typing your search above and press return to search.

100 ஆண்டுகளுக்கு முன்னால் நாடு கடத்தப்பட்டு, மீண்டு வரும் அன்னபூரணி சிலையின் பயணம்.!

100 ஆண்டுகளுக்கு முன்னால் நாடு கடத்தப்பட்டு, மீண்டு வரும் அன்னபூரணி சிலையின் பயணம்.!

100 ஆண்டுகளுக்கு முன்னால் நாடு கடத்தப்பட்டு, மீண்டு வரும் அன்னபூரணி சிலையின் பயணம்.!

Saffron MomBy : Saffron Mom

  |  2 Dec 2020 8:46 AM GMT

நவம்பர் 29ம் தேதி அன்று நடந்த மான் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் இருந்து 100 ஆண்டுகளுக்கு முன்னால் திருடப்பட்டு நாடு கடத்தப்பட்ட கடவுள் அன்னபூரணியின் பழமையான சிலை கனடாவிலிருந்து மறுபடியும் இந்தியாவிற்கு கொண்டு வரப்படுவதாக தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், அம்மா அன்னபூரணியின் பழமையான சிலை ஒன்று கனடாவில் இருந்து இந்தியாவிற்கு வருவதை நினைத்து ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டும். வாரணாசியின் ஒரு கோவிலில் இருந்து இந்த சிலை நூறு ஆண்டுகளுக்கு முன்னால் திருடப்பட்டு நாட்டை விட்டு வெளியே கடத்தப்பட்டது. காசியுடன் அம்மா அன்னபூர்ணிக்கு சிறப்பான உறவு உள்ளது. இந்த சிலை மீண்டு வந்தது நமக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. பூர்ணிவயின் சிலையைப் போலவே நம்முடைய பாரம்பரியமும் சர்வதேச கும்பல்களினால் பாதிக்கப்படுகிறது" என்று தெரிவித்தார்.

கனடாவை எப்படி சேர்ந்தது?

அன்னபூரணி, உணவின் கடவுள் ஆவார். 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த சிலை பனாரஸ் பாணியில் செதுக்கப்பட்டுள்ளது. தற்போது இது கனடாவின் யுனிவர்சிட்டி ஆப் ரெஜினாவை சேர்ந்த மெக்கன்சி கலைக் கண்காட்சியில் உள்ளது.

கடந்த வருடம் ஆர்டிஸ்ட் திவ்யா மெஹ்ரா இந்த காலரியில் ஒரு கண்காட்சியை திறந்து வைக்க சென்றிருந்தார். அப்பொழுது இதை குறித்து ஆராய்ச்சியை மேற்கொள்ள ஆரம்பித்தார். கையில் அரிசி கிண்ணத்தை வைத்திருந்த ஒரு சிற்பத்தை குறித்து ஆராய்ச்சி செய்தவர், அதே சிற்பம் 1913இல் வாரணாசியில் ஒரு கோவிலில் இருந்து திருடப்பட்டது என்பதையும் அறிந்தார்.

அது இந்த சிலை தானா என்று கண்டறிய சித்தார்த்தா விசா என்ற அவர் அமெரிக்காவில் இருந்து புகழ் பெற்ற நிபுணர் அழைக்கப்பட்டார். அவர் அது அன்னபூரணி சிலை தான் என்பதை உறுதி செய்தார்.

திவ்யா மெஹ்ரா செய்த ஆராய்ச்சியின் படி மெக்கன்சி இந்தியாவிற்கு 1913இல் பயணம் மேற்கொண்டு வந்தார். இந்த அன்னபூர்ணி சிலையை எப்படியாவது அடைய வேண்டும் என்ற மெக்கன்சியின் விருப்பத்தை ஒட்டு கேட்ட ஒரு நபர், வாரணாசியின் நதிக்கரையில் இருந்த கற்ப்படிக்கட்டுகளில் இருந்த இச்சிலையை அவருக்காக திருடி தந்ததாக கண்டறியப்பட்டது.

திவ்யா மெஹ்ரா, மெக்கன்சி கலை கண்காட்சியின் CEO வை அணுகி, இந்த சிலையை திருப்பி அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். கண்காட்சியும் இருக்கும் ஒப்புக்கொண்டது. திருடுபோன சிலையின் கண்டுபிடிப்பை பற்றி அறிந்த ஒட்டவாவில் இருந்த இந்திய ஹை கமிஷன், திருப்பி அனுப்பும் பணிகளைச் செய்வதற்காக அவர்களை தொடர்பு கொண்டனர்.

அடுத்த மாதத்தில் திருப்பி இந்த சிலை அனுப்பப்படுகிறது. வீடியோ கான்பிரன்ஸ் வழியாக திருப்பி அனுப்பும் நிகழ்ச்சி ஏற்கனவே நவம்பர் 19ஆம் தேதி நடந்துவிட்டது.

யுனிவர்சிட்டி ஆஃப் ரெஜினாவின் துணைவேந்தர் தாமஸ் தெரிவிக்கையில், 'ஒரு பல்கலைக்கழகமாக வரலாற்று ரீதியிலான தவறுகளை சரி செய்ய வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. காலனித்துவ பாதிப்புகளை நாம் தாண்டி வர உதவி செய்ய வேண்டும். இந்த சிலையை திருப்பி அனுப்புவது மட்டுமே நூறாண்டுகளுக்கு முன்னால் செய்த தவறுக்கு பதில் ஆகாது என்றாலும் இது ஒரு முக்கியமான செயலாகும்" என்று தெரிவித்தார்.

டிசம்பர் மாத இறுதியில் இச்சிலை இந்தியாவிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முழுமையான சரிபார்த்தல்களுக்குப் பிறகு சிலை எங்கே இருக்கும் என்று இறுதி முடிவு எடுக்கப்படும். பிரதமர் ஏற்கனவே அது காசிக்கு திருப்பி அனுப்பப்படும் என்று கூறினார். உண்மையில் அந்த சிலை எங்கே இருந்து வந்தது என்று ஆராய்ந்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து அக்கோவிலின் அறங்காவலர்கள் இடம் ஒப்படைக்கப்படும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News