Kathir News
Begin typing your search above and press return to search.

டெல்லியில் மிகப்பெரிய கொரோனா மருத்துவமனை மூடப்படுகிறது.. காரணம் இதுதானாம்.!

டெல்லியில் மிகப்பெரிய கொரோனா மருத்துவமனை மூடப்படுகிறது.. காரணம் இதுதானாம்.!

டெல்லியில் மிகப்பெரிய கொரோனா மருத்துவமனை மூடப்படுகிறது.. காரணம் இதுதானாம்.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 Feb 2021 6:44 PM GMT

டெல்லியில் மிகப்பெரிய கொரோனா மருத்துவமனையை திபெத் போலீஸ் படையால் 1.7 கி.மீ. நீளம் 700 மீட்டர் அகலத்திற்கு உருவாக்கப்பட்டது. தற்போது கொரோனா தொற்று குறைந்த காரணத்தினால் தற்போது அந்த சிகிச்சை மூடப்படுகிறது. கடந்த ஆண்டு இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. இதனையடுத்து மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தொற்று அதிகரிக்க தொடங்கியது. இதனால் தற்போது உள்ள மருத்துவமனையில் நோயாளிகள் குவிந்த காரணத்தினால் தற்காலிக மருத்துவமனையை மத்திய அரசு உருவாக்க தொடங்கியது.

அதன்படி கடந்த ஆண்டு ஜூலையில் இந்தோ திபெத் போலீஸ் படையை கொண்டு டெல்லியில் மத்திய அரசு இந்த கொரோனா சிகிச்சை மையத்தை அவசர காலத்திற்கு தொடங்கியது. இந்த மருத்துவமனையில் லட்சக்கணக்கானோர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்த சிகிச்சை மையம் கிட்டத்தட்ட 20 கால்பந்து மைதானம் அளவிற்கு பரந்து விரிந்த பகுதியாகும். 4000 படுக்கைகள் ஆக்சிஜன் வழங்கக் கூடிய வசதியுடன் இருந்தன. 75 ஆம்புலன்ஸ்கள் வாகனங்கள் எப்போதும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது.

தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. டெல்லியில் அதிகமான தொற்று அதிகரித்து வந்த நிலையில், தற்போது மிக வேகமாக தொற்று குறைந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதலில் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஒரு சில மாநிலங்களில் தடுப்பூசி முடிவடையும் தருவாயில் உள்ளது.

இந்நிலையில், சர்தார் பட்டேல் மையத்திலும் நோயாளிகள் எண்ணிக்கை 59 ஆக குறைந்துள்ளது. தற்போது மருத்துவமனையில் உள்ளவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின்னர் மூடுவதற்கு இந்தோ திபெத் எல்லை போலீஸ் படை முடிவெடுத்துள்ளது. உலகிலேயே மிகப்பெரிய கொரோனா மருத்துவமனை மூடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News