Kathir News
Begin typing your search above and press return to search.

ஒரு ஆட்டின் விலை ரூ.1.5 கோடி.. விலை நிர்ணயித்த விவசாயின் பின்னால் பிரதமர் மோடி.!

ஒரு ஆட்டின் விலை ரூ.1.5 கோடி.. விலை நிர்ணயித்த விவசாயின் பின்னால் பிரதமர் மோடி.!

ஒரு ஆட்டின் விலை ரூ.1.5 கோடி.. விலை நிர்ணயித்த விவசாயின் பின்னால் பிரதமர் மோடி.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  14 Dec 2020 7:40 AM GMT

மகாராஷ்டிரா மாநிலத்தில் மிகவும் அரியதாக கருதப்படும், ‘மட்ஜியல்’ இனத்தை சேர்ந்த ஒரு ஆட்டுக்கு 70 லட்சம் ரூபாய் தருவதாக கூறியதை ஏற்க மறுத்த விவசாயி, அதற்கு பதிலாக 1.5 கோடி ரூபாய் விலை நிர்ணயித்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், சாங்லி மாவட்டம் ஜாட் தாலுகாவில் பலர் ‘மட்ஜியல்’ இன ஆடுகளை வளர்த்து வருகின்றனர். செம்மறி ஆடுகளில் இருந்து வேறுபட்டுள்ள இவை உயரமானவை என்பதுடன், அதிக வளர்ச்சி விகிதம் உடைந்ததாக காணப்படும். இறைச்சி தரத்தில் மிக உயர்ந்தவை என்று சொல்லப்படுகிறது.

இது போன்ற இரங்களின் ஆட்டின் விலை தலா, 10 லட்சம் முதல், 30 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படும். இந்த வகை ஆடுகள் அதிகமிருக்கும் மட்ஜியல் கிராமத்தின் பெயரையே அதற்கு வைத்துள்ளனர்.

சாங்லி மாவட்டம் அட்பாடி தாலுகாவில் வசிப்பவர் பாபு மெட்காரி. இவர் ஆட்டு பண்ணை வைத்துள்ளார். இவரின் பண்¬யில் உள்ள ஓர் ஆட்டின் பெயர் மோடி. சமீபத்தில், 70 லட்சம் ரூபாய் விலை தருவதாக ஒருவர் கேட்டும், அதனை பாபு தரமறுத்துள்ளார்.

இது பற்றி அவர் கூறியதாவது: இந்த ஆட்டின் உண்மையான பெயர் சர்ஜா. நரேந்திர மோடி, போட்டியிட்டு அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்று நாட்டின் பிரதமராக பதவி ஏற்றுள்ளார். சர்ஜாவின் ஆட்சி என் ஆட்டு பண்ணையிலும் சர்ஜாவின் ஆட்சி தான் நடக்கிறது. இதனால் அதற்கு செல்லமாக மோடி என்று பெயரிட்டுள்ளேன்.

மிக அதிர்ஷ்டகரமானது என்பதுடன், மதிப்பு மிக்கவை என்பதால் விற்பனை செய்வதற்கு எனக்கு விருப்பம் இல்லை. எனவே, 70 லட்சம் ரூபாய்க்கு கேட்டவரிடம், 1.5 கோடி ரூபாய் கொடுத்தால் ஆட்டை கொடுக்கிறேன் என கூறினேன். இதனை கேட்ட வியாபாரி திரும்பி சென்றார்.

இந்த ஆடு மிக வசீகரமானது என்பதுடன், எனக்கும் என் குடும்பத்தினருக்கம் மிக செல்லமானது. இதனாலேயே ஆடு கேட்பவர்களிடம் அதிகமான விலை சொல்வேன். அவர்கள் அப்போதுதான் ஆட்டை கேட்க மாட்டார்கள், எங்க குடும்பத்தாருக்கு அனைவருக்கு பிடித்த ஆடு மோடி. அதனால் நாங்கள் எப்போதும் விற்பனை செய்ய மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News