Kathir News
Begin typing your search above and press return to search.

விண்ணில் பாய்ந்தது PSLV சி-50 ராக்கெட்.!

விண்ணில் பாய்ந்தது PSLV சி-50 ராக்கெட்.!

விண்ணில் பாய்ந்தது PSLV சி-50 ராக்கெட்.!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  17 Dec 2020 3:38 PM GMT

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து தகவல்தொடர்பு செயற்கைக்கோளை சுமந்தபடி PSLV சி-50 ராக்கெட் 25 மணிநேர கவுண்ட்டவுனை முடித்துக்கொண்டு இன்று விண்ணில் பாய்ந்தது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் பூமி கண்காணிப்பு பணிக்காக 1,410 கிலோ எடை கொண்ட CMS.01 என்ற செயற்கைக்கோளை வடிவமைத்து உள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவுதளத்தில் இருந்து PSLV சி-50 ராக்கெட் மூலம் செயற்கைக்கோள் இன்று மாலை வானிலை நிலைமைகளுக்கு உட்பட்டு விண்ணில் பாய்ந்தது.

கல்வி, மருத்துவம், பேரிடர் மேலாண்மை, சி-பாண்டு ஆகிய பணிகளுக்குத் தேவையான தகவல்தொடர்பு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தப்படுகிறது. PSLV சி-50 ராக்கெட் 44.4 மீட்டர் உயரம் கொண்டது. இதில் முதல் நிலையில் திட எரிபொருளும், 2-ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பப்பட்டு உள்ளன. இது இந்தியாவின் 52-வது PSLV ராக்கெட் ஆகும்.

இதற்கான இறுதிக்கட்ட பணியான 25 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று பகல் 2.41 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். 25 மணிநேர கவுண்ட்டவுனை முடித்துக்கொண்டு திட்டமிட்டபடி விண்ணில் பாய்ந்தது

Next Story
கதிர் தொகுப்பு
Trending News