Kathir News
Begin typing your search above and press return to search.

விவசாய சங்கங்களிடையே 'சக்கா ஜாம்' விவகாரத்தில் விழுந்த விரிசல்?

விவசாய சங்கங்களிடையே 'சக்கா ஜாம்' விவகாரத்தில் விழுந்த விரிசல்?

விவசாய சங்கங்களிடையே சக்கா ஜாம் விவகாரத்தில் விழுந்த விரிசல்?

Saffron MomBy : Saffron Mom

  |  8 Feb 2021 8:10 AM GMT

‘விவசாயிகள்’ தலைவர்கள் என்று கூறிக்கொண்டு டெல்லி எல்லையில் போராடி வருபவர்கள் தங்கள் இயக்கத்தை விவசாயிகளின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக சித்தரிக்க முயற்சிக்கின்றனர். இந்நிலையில் தலைமைப் பிரச்சினை தொடர்பாக விவசாய அமைப்புகளின் பிரிவுகளுக்கு இடையே விரிசல்கள் உருவாகியுள்ளதாகத் தெரிகிறது.

சம்யுக்தா கிசான் மோர்ச்சா (SKM) செய்தித் தொடர்பாளர் தர்ஷன் பால் சிங் மற்றும் பாரதிய கிசான் யூனியன் (BKU) செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிக்கைட் ஆகியோருக்கு இடையே தான் இந்த விரிசல்கள் தோன்றியுள்ளதாகத் தகவல். 'சக்கா ஜாம்' என்ற நெடுஞ்சாலை மறியல் சனிக்கிழமையன்று மதியம் 12 மணி முதல் மூன்று மணி வரை நடைபெற்றது.

3 மணி நேரம் நடந்த இந்த 'சக்கா ஜாம்' நாட்டில் பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படுத்தாமல் முடிவடைந்த நிலையில், சாமியுக்தா கிசான் மோர்ச்சா (SKM) செய்தித் தொடர்பாளர் தர்ஷன் பால் சிங் சனிக்கிழமை டிக்கைட்டுக்கு எதிராக தனது அதிருப்தியை தெரிவித்திருந்தார். சில முடிவுகளை எடுப்பதற்கு முன்பு அவர்களுடன் கலந்தாலோசித்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

முன்னதாக, ராகேஷ் டிக்கைட் வெளியிட்ட அறிக்கையில், “சில இடங்களில் வன்முறையை பரப்புவதற்கு சிலர் முயற்சிக்க இருந்தார்கள் என்பதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. எனவே உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் சக்கா ஜாம் வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம். ” என்றார்.

உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் ‘சக்கா ஜாம்’ செய்யக்கூடாது என்ற டிக்கிட் முடிவில் தர்ஷன் பால் மகிழ்ச்சியடையவில்லை என்று கூறப்படுகிறது. ஊடகங்களுடன் பேசிய முன்னாள் மாவோயிஸ்ட் தலைவரான தர்ஷன் பால், ராகேஷ் டிக்கைட் இதுபோன்ற முடிவை எடுப்பதற்கு முன்பு விவசாய சங்கங்களுடன் கலந்து ஆலோசித்திருக்க வேண்டும் என்று கூறினார்.

மற்றொரு விவசாய சங்கத் தலைவரின் கூற்றுப்படி, உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டாம் என்ற முடிவை ராகேஷ் டிக்கைட் அவசரமாக எடுத்தார், எவரையும் கலந்தாலோசிக்கவில்லை. இரண்டு மாதங்களுக்கும் மேலாக டெல்லியுடன் எல்லைகளில் முகாமிட்டுள்ள ‘விவசாய’ தலைவர்கள் டிக்கீட்டின் தன்னிச்சையான முடிவைப் பற்றி ஆச்சரியப்படுவதாக அவர் கூறினார்.

இதற்கிடையில், சில கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும் ‘விவசாய’ சங்கத்தில் எந்தப் பிரிவும் இல்லை என்று தர்ஷன் பால் கூறியுள்ளார்.

Cover Image Credit: OpIndia

Next Story
கதிர் தொகுப்பு
Trending News