Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா தடுப்பூசியில் தொடர்ந்து அரசியல் செய்து கொண்டியிருக்கும் சமாஜ்வாடி கட்சி!

கொரோனா தடுப்பூசியில் தொடர்ந்து அரசியல் செய்து கொண்டியிருக்கும் சமாஜ்வாடி கட்சி!

கொரோனா தடுப்பூசியில் தொடர்ந்து அரசியல் செய்து கொண்டியிருக்கும் சமாஜ்வாடி கட்சி!

Saffron MomBy : Saffron Mom

  |  16 Jan 2021 1:06 PM GMT

இன்று முதல் கொரோனா தொற்றுநோய்க்கு எதிராக பெரியளவிலாக மக்களுக்குச் செலுத்தவிருக்கும் கொரோனா தடுப்பூசியின் முந்தைய நாளில், இதிலும் தங்கள் அரசியல் எண்ணங்களை வைத்து கட்சிகள் விளையாடிக் கொண்டிருக்கின்றது. முதலில் அகிலேஷ் யாதவை தொடர்ந்து தற்போது SP தலைவர் IP சிங் என கொரோனா தடுப்பூசி குறித்து எதிரான நோக்கங்களைத் தொடர்ந்து சமாஜ்வாடி கட்சி வெளிப்படுத்தி வருகின்றது.

தனது எண்ணங்களை ட்விட்டற்கு எடுத்துச் சென்று, தடுப்பூசி ஏழை மக்களைக் கொன்றுவிடும் என்று வெள்ளிக்கிழமை அன்று தனது டிவிட்டர் பக்கத்தில் சமாஜ்வாடி கட்சியின் செய்தி தொடர்பாளர் IP சிங் தெரிவித்தார். வரப்போகும் அழிவுகளைத் தவிர்க்க பா.ஜ.க தொண்டர்கள் அதனை முதலில் செலுத்திக் கொள்ளவேண்டும் என்று தெரிவித்துள்ளார். இருப்பினும் பின்னர் அவர் கருத்தை டிவிட்டரில் இருந்து நீக்கினார்.

கடந்த வாரமும் தற்போது பல்வேறு மாநிலங்களில் பரவி வரும் பறவை காய்ச்சல் குறித்த சர்ச்சைக்குரிய கருத்தினை SP செய்தி தொடர்பாளர் கூறியிருந்தார். பிரதமர் மயில் மற்றும் பிற பறவைகளுக்கு உணவளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பிரதமர் பறவைகளுக்கு உணவளிப்பதால் பறவை காய்ச்சல் அதிகரித்து வருகின்றது என்று கூறியிருந்தார்.

தற்போது வளர்ந்து வரும் தடுப்பூசி குறித்து தவறான கருத்துக்களை வெளியிட்டு மக்களிடையே ஒரு பதற்றத்தை சமாஜ்வாடி கட்சித் தலைவர்கள் உண்டாக்கி வருகின்றனர். இந்தியாவில் இருக்கும் அனைவரும் கொரோனா தடுப்பூசி எதிராக ஒன்று கூடும் வேளையில் சமாஜ்வாடி தலைவர்களோ அல்லது தொண்டர்களோ ஒரு சிறிய முயற்சியைக் கூட எடுக்க விரும்பவில்லை.

IP சிங்கு முன்னர், சமாஜ்வாடி கட்சித் தலைவரும் மற்றும் மிர்சாபூர் MLA அஷுதோஷ் சின்ஹா ஜனவரி 2 இல் மக்கள் கொரோனா தடுப்பூசி செயலிழந்தவை என்று அச்சத்தில் உள்ளதாகத் தெரிவித்தார். இவருக்கு முன்னாள் முன்னாள் உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், தற்போது மிகவும் தேவையான கொரோனா தடுப்பூசி பா.ஜ.க வுடையது என்று அதனைச் செலுத்திக் கொள்ளமாட்டேன் என்று தெரிவித்தார்.

இருப்பினும் தனது கருத்தில் யூ-டர்ன் எடுத்துக்கொண்டு, "கொரோனா தடுப்பூசி செலுத்துவது ஒரு முக்கியமான செயல். அதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும். ஏழை மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் குறிப்பிட்ட நாள் குறித்து அறிவிக்க வேண்டும்," என்று கூறியிருந்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News