Kathir News
Begin typing your search above and press return to search.

கியான்வாபி மசூதியில் துவங்கிய ஆய்வு - மசூதியில் உள்ள 'சிங்கார கௌரி அம்மன்' பூஜை தினமும் நடைபெறுமா?

வாரணாசி கியான்வாபி மசூதியில் ஆய்வு தொடங்கியுள்ளது, பலத்த பாதுகாப்புடன் காலை 8 மணி முதல் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

கியான்வாபி மசூதியில் துவங்கிய ஆய்வு - மசூதியில் உள்ள சிங்கார கௌரி அம்மன் பூஜை தினமும் நடைபெறுமா?

Mohan RajBy : Mohan Raj

  |  14 May 2022 12:15 PM GMT

வாரணாசி கியான்வாபி மசூதியில் ஆய்வு தொடங்கியுள்ளது, பலத்த பாதுகாப்புடன் காலை 8 மணி முதல் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் கியான்வாபி மசூதி உள்ளது, மசூதி வளாகத்தில் வெளிப்புற சுவற்றில் சிங்கார கௌரி அம்மன் சிலை உள்ளது ஆண்டுக்கு ஒரே ஒருமுறை மட்டும் அந்த அம்மனுக்கு பூஜைகள் நடத்த அனுமதிக்கப் படுகிறது.

இந்நிலையில் சிங்கார கோரி அம்மனுக்கு தினமும் பூஜை நடத்த அனுமதி கோரி 5 பெண்கள் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர், அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கியான்வாபி மசூதியில் ஆய்வு நடத்த குழு அமைத்தது. இதை எதிர்த்து மசூதி நிர்வாகமான அஞ்சுமன் இன்தஜாமியா மசூதி கமிட்டி சார்பில் வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் கள ஆய்வை 17ம் தேதிக்குள் முடித்து அறிக்கை அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து அஞ்சுமன் இன்தஜாமியா மசூதி கமிட்டி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது, நேற்றைய மனைவி விசாரித்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு பரிசீலித்த பின்னர் நீதிபதி என்.வி.ரமணா கூறுகையில், 'இன்னும் வழக்கு தொடர்பான ஆவணங்களை பார்க்காததால் இப்போது கள ஆய்வுக்கு தடை விதிக்க முடியாது' என கூறினார்.

இதனைத் தொடர்ந்து மசூதியில் ஆய்வு தொடங்கியுள்ளது. ஆய்வுகளில் வழக்கறிஞர் ஆணையர் அஜய் குமார் மிஸ்ரா, சிறப்பு வழக்கறிஞர் விஷால் சிங், துணை வழக்கறிஞர் பிரதாப் சிங் மற்றும் மனுதாரர்கள் அவர்களின் வழக்கறிஞர்கள் ஆகியோர் அடங்கிய 36 பேர் கொண்ட குழு பேர் ஆய்வுக்காக மசூதிக்கு வந்தனர்.


இன்று காலை 8 மணி முதல் துவங்கிய ஆய்வு தற்பொழுது வரை நடந்து வருகிறது. மேலும் அங்கு ஏதேனும் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க ஒரு கிலோ மீட்டர் தொலைவு வரை போலீசார் குவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Source - Hindu Tamil

Next Story
கதிர் தொகுப்பு
Trending News