Kathir News
Begin typing your search above and press return to search.

எப்படிப்பட்ட போர் சூழலிலும் இனி இராணுவம் துல்லியமாக தகவல் பரிமாற முடியும் - மேக் இன் இந்தியா திட்டத்தின் வெற்றி!

எப்படிப்பட்ட போர் சூழலிலும் இனி இராணுவம் துல்லியமாக தகவல் பரிமாற முடியும் - மேக் இன் இந்தியா திட்டத்தின் வெற்றி!

எப்படிப்பட்ட போர் சூழலிலும் இனி இராணுவம் துல்லியமாக தகவல் பரிமாற முடியும் - மேக் இன் இந்தியா திட்டத்தின் வெற்றி!

Muruganandham MBy : Muruganandham M

  |  19 Feb 2021 8:05 AM GMT

அனைத்து இராணுவ செயல்பாடுகளுக்கும் தகவல் பரிமாற்றம் மிகவும் முக்கியம். அந்தவகையில் போரின் போது இந்திய ராணுவ வீரர்கள் தகவல்களை பரிமாறிக்கொள்ள CNR என்று அழைக்கப்படும் Combat Net Radio (CNR) என்ற வானொலி சாதனத்தை பயன்படுத்துவர்.

பாரம்பரிய CNR கருவியின் வாயிலாக குரல் வழியான தகவல்களை மட்டுமே பரிமாறிக்கொள்ள முடியும்.

நவீன தொழில்நுட்பங்களின் உதவியோடு ராணுவ வீரர்கள் போரில் ஈடுபடுவதற்கு ஏதுவாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மென் பொருளை அடிப்படையாகக் கொண்ட வானொலி சாதனங்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.

இது போன்ற நவீன தொழில்நுட்பக் கருவிகளில் தரவுகள் பரிமாற்றம், இரைச்சலான சூழ்நிலைகளிலும் துல்லியமான தகவல்களை வழங்குதல், கூடுதல் பாதுகாப்புடன் மேம்படுத்தப்பட்ட தகவல் பரிமாற்றம் ஆகிய வசதிகள் இடம்பெற்றுள்ளன.

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இதுபோன்ற மிக உயரிய அதிர்வெண் கொண்ட மென்பொருள் வானொலியின் பயன்பாடு இந்திய ராணுவத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.

தற்சார்பு இந்தியா கொள்கைக்கு இணையாக, மேம்படுத்தப்பட்ட தகவல் தொடர்பு முறையில் தன்னிறைவை அடைவதற்கு இது போன்ற கருவிகள் வழிவகை செய்யும்.

18 இந்திய விற்பனையாளர்களுக்கு திட்ட அனுமதி ஆணை (பிஎஸ்ஓ) இப்போது வழங்கப்பட்டுள்ளது. டிஏபி 2020 இன் வாங்க (இந்திய-ஐடிடிஎம்) பிரிவின் விதிகளின்படி முன்மாதிரியின் வெற்றிகரமான வளர்ச்சிக்குப் பின் ஒரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் வைக்கப்படும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News