Kathir News
Begin typing your search above and press return to search.

நவம்பர் 29ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்!

இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரானது வருகின்ற 29ம் தேதி (நவம்பர்) தொடங்கி டிசம்பர் மாதம் 23ம் தேதி வரை நடைபெறுகிறது.

நவம்பர் 29ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்!

ThangaveluBy : Thangavelu

  |  18 Nov 2021 3:31 AM GMT

இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரானது வருகின்ற 29ம் தேதி (நவம்பர்) தொடங்கி டிசம்பர் மாதம் 23ம் தேதி வரை நடைபெறுகிறது.

கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விதிமுறைகளுடன் செயல்பட்டதை போன்று தற்போதைய குளிர்கால கூட்டத்தொடரும் நடைபெறுகிறது. கடந்த ஆண்டு கொரோனா நோய் தொற்று காரணமாக குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறவில்லை. ஆனால் தற்போதைய குளிர்கால கூட்டத்தொடர் 20 நாட்கள் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் வருகின்ற 29ம் தேதி முதல் டிசம்பர் 23ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்பலாம் என கூறப்படுகிறது. ஆனால் அதற்கான அனைத்து வகையிலான தகவல்களை பாஜக அரசு நாடாளுமன்றத்தில் முன்வைக்க தயாராக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Source: Puthiyathalamurai

Image Courtesy: BBC


Next Story
கதிர் தொகுப்பு
Trending News