மதமாற்றத்திற்கு எதிரான சட்டத்தில் முதல் கைது நடவடிக்கையைத் தொடங்கியுள்ள யோகி அரசு.!
மதமாற்றத்திற்கு எதிரான சட்டத்தில் முதல் கைது நடவடிக்கையைத் தொடங்கியுள்ள யோகி அரசு.!

உத்தரப் பிரதேசத்தில் லவ் ஜிகாத்துக்கு எதிராகவும் மற்றும் கட்டாய மதமாற்றத்திற்கு எதிராகவும் புதிய சட்டம் அமல்படுத்திய சில நாட்களிலேயே, அது தொடர்புடைய குற்றத்தில் முதல் கைதை பரேலி காவல்துறை செய்துள்ளது.
இதில் கட்டாய மதமாற்றத்திற்கு எதிரான சட்டம் அமல்படுத்திய சில நிமிடங்களிலேயே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஞாயிற்றுக்கிழமை அன்று 22 வயதுடைய உவைஸ் அஹமத் என்பவர் மேல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பரேலி மாவட்டத்தில் தோரணியா பகுதியைச் சேர்ந்த 20 வயது திருமணமான பெண்ணை கட்டாய மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதற்காகவும் மற்றும் கடத்துவதாக அச்சுறுத்தியதற்காகவும் அஹமத் மேல் உத்தரப் பிரதேசம் கட்டாய மதமாற்றச் சட்டம் 2020 அடிப்படியில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் குற்றம்சாட்டப்பட்ட அஹமத் அச்சத்தில் தலைமறைவாக இருந்தார்.
"அவரை தேடுவதற்காகப் பக்கத்து மாவட்டங்களில் குழுக்களை நியமித்தோம். பின்னர் அவர் புதன்கிழமை அன்று மாஜிஸ்திரேட் முன்பு முன்னிறுத்தப்பட்டார் , 14 நாட்கள் நீதித்துறை காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்," என்று காவல்துறை துணை ஆய்வாளர் சன்சார் சிங் கூறினார்.
அஹமத் மற்றும் அந்த பெண்ணும் பள்ளி நண்பர்கள். கடந்த ஆண்டு அந்த பெண் காணாமல் போய் விட்டதாக அவரது குடும்பத்தினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர். பின்னர் இருவரும் சேர்ந்த வாழ விரும்புவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் போபாலில் வைத்து அந்த பெண் மீட்கப்பட்டுள்ளார். அவருக்கு வேறொரு நபருடன் திருமணமும் ஆனது. ஆனால் அஹமத் அவளைப் பின்தொடர்வதை விடவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
பெண்ணின் தந்தை அளித்த புகாரில், அஹமத் கடந்த மூன்று ஆண்டுகளாகத் தனது மகளைத் தாக்கி மிரட்டி வந்ததாகத் தெரிவித்துள்ளார். அஹமத் மேல் IPC சட்டம் 504 மற்றும் 506 கீழும் சட்டம் 3/5 கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.