Kathir News
Begin typing your search above and press return to search.

ஹிந்துவாக நடித்து மைனர் சிறுமியை நாசமாக்கிய கொலு கான் - தொடரும் லவ் ஜிகாத்!

ஹிந்துவாக நடித்து மைனர் சிறுமியை நாசமாக்கிய கொலு கான் - தொடரும் லவ் ஜிகாத்!

ஹிந்துவாக நடித்து மைனர் சிறுமியை நாசமாக்கிய கொலு கான் - தொடரும் லவ் ஜிகாத்!

Saffron MomBy : Saffron Mom

  |  1 Dec 2020 7:46 PM GMT

கான்பூர் தற்போது மேலும் ஒரு லவ் ஜிகாத் வழக்கு வெளி வந்துள்ளது. இதில் குற்றம் சாட்டப்பட்ட கொலு கான் தனது அடையாளங்களை மறைத்துக் கொண்டு, இந்து மைனர் சிறுமியை மதமாற்றத்திற்குக் கட்டாயப்படுத்தி திருமணம் செய்ய வற்புறுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், சிறுமி மறுத்த போது அவளது ஆபாசப் படங்களை நண்பர்களுடனும் பகிர்ந்துள்ளார். அவர் மேல் தற்போது POSCO சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அறிக்கையில், குற்றம்சாட்டப்பட்டவர் தனது உண்மை அடையாளத்தை மறைத்துக் கொண்டு ராஜ் என்று தன்னிடம் அறிமுகம் செய்துக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சந்தேகத்தைத் தவிர்க்க ஹிந்துக்களின் புனித பூநூல் அணிவது மற்றும் திலகம் அணிந்து கொண்டு கோவிலுக்குச் செல்வது போன்றவற்றைச் செய்ததாகவும் பாதிக்கப்பட்டவர் குற்றம் சாட்டியுள்ளார். சில நாட்களுக்குப் பிறகு அவரது உண்மை அடையாளத்தை வெளிப்படுத்தி திருமணம் செய்துக்கொள்ளவும் இஸ்லாத்திற்கு மாறவும் வற்புறுத்தியதாகக் கூறியுள்ளார்.

மேலும் கொலு கான் அவரது நண்பர்களுடன் இணைந்து தன்னை பலாத்காரம் செய்ய முயன்றதாகவும் பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார். சில நேரங்களில் மது அருந்த வைத்ததாகவும் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர் கொலு கான் மேல் பதிவு செய்த FIR-இல் அவரை பயிற்சி மையத்தில் சந்தித்ததாகத் தெரிவித்துள்ளார். மேலும் திருமணத்திற்கும் மதமாற்றத்திற்கு மறுத்த போது அவரை கடத்தி சென்று வீடியோக்களை சமூக ஊடகத்தில் பரப்புவதாகவும் அச்சுறுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவரது வீடியோக்களை அவரது நண்பர் சன்னியிடம் பகிர்ந்து கொண்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

பாதிக்கப்பட்டவர் தற்போது யோகி ஆதித்யநாத் உத்தரப் பிரதேசத்தில் அமல்படுத்திய லவ் ஜிஹாதுக்கு எதிரான சட்டத்தை நம்புவதாகவும் கூறியுள்ளார். லவ் ஜிஹாத்தில் ஈடுபடுபவர்களுக்கு இந்த சட்டம் கட்டாயம் தண்டனை அளிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News