மின் தட்டுப்பாடு வராது: மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி உறுதி!
கோல் இந்தியா நிறுவனத்திடம் 24 நாட்களுக்கு தேவையான 43 மில்லியன் டன் நிலக்கரி கையிருப்பு இருப்பதாகவும், மின்சார விநியோகத்தில் எவ்வித இடையூறும் இருக்காது என்று நாட்டு மக்களிடம் உறுதியுடன் கூறுகிறேன் என மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறியுள்ளார்.
By : Thangavelu

ஒட்டு மொத்த மின் தேவையில் 70 சதவீதம், நிலக்கரி வாயிலாக இயக்கப்படும் அனல் மின் நிலையங்களில் வாயிலாகவே கிடைக்கிறது. தற்போது நாட்டில் 135 அனல் மின் நிலையங்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானவை, போதிய நிலக்கரி இல்லாமல் மின்உற்பத்தி குறைந்துள்ளது. கடுமையான மின்தடையை சந்திக்க இருப்பதாக தமிழகம் மற்றும் ஒடிசா மாநிலங்களும் ஏற்கனவே தெரிவித்துள்ளது.
இதனிடையே மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறியதாவது: மின்சார விநியோகத்தில் எவ்வித இடையூறும் ஏற்படாது என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், கோல் இந்தியா நிறுவனத்திடம் 24 நாட்களுக்கு போதுமான 43 மில்லியன் டன் நிலக்கரி கையிருப்பு இருக்கிறது. அனல்மின் நிலையங்களுக்கு தேவைக்கு ஏற்ப தினசரி நிலக்கரி அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
தற்போது பருவமழை காலம் நிறைவு பெறும் நிலையில், நிலக்கரி கையிருப்பு அதிகரிப்பதுடன் மீண்டும் அனுப்பி வைக்கப்படும். எனவே பயத்தை உண்டாக்கும் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என உறுதியளித்துள்ளார்.
Source: Dinamalar
Image Courtesy: The Economic Times